For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவரு பொம்மையா, இல்லை பெண்ணா...? - பார்ப்பவர்களைக் குழப்பும் 29 வயது ‘பார்பி’ பெண்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: பார்பி பொம்மைகள் குறித்துத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அதிலும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள், டீன் ஏஜ் பெண்கள், இளம் பெண்களின் பிரியத்துக்குரிய பொம்மை இதுதான்.

இந்த பொம்மைகள் அறிமுகமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட போதிலும் இன்று வரை இந்த பொம்மைகளின் அழகும் குறையவில்லை. அதன் மீதான மக்களின் ஈர்ப்பும் குறையவில்லை. அந்த அளவுக்கு பார்பி பெண் பொம்மைகள் மீது மக்களுக்கு மக்களுக்கு உள்ள கொள்ளைப் பிரியம்.

பார்பி பொம்மை போலவே தோன்றத் துடிக்கும் டீன் ஏஜ் சிறுமிகள் ஏராளம். இதில் வெலரியா லுக்யெனோவா என்ற இளம் பெண் கிட்டத்தட்ட பார்பி பொம்மை போலவே மாறி உலகப் புகழ் பெற்றவர்.

வெலரியா...

வெலரியா...

1985ம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியனில் உள்ள திர்ரஸ்போல் என்ற ஊரில் பிறந்தவர் வெலரியா. இவரது பெற்றோர் மால்டோவியா மற்றும் உக்ரைன் கலப்பு ஆவார். வெலரியா வசித்து வருவது டிரான்ஸ்நியஸ்டரியா என்ற பகுதியாகும்.

தனிநாடு...

தனிநாடு...

டிரான்ஸ்நியஸ்டரியா ஒரு தன்னாட்சி பெற்ற தனி நாடு போன்ற பகுதியாகும். இதை உரிமை கொள்ள மால்டோவியா மற்றும் உக்ரைன் நாடுகள் முயன்று வருகின்ற போதிலும் ரஷ்யாவின் அரவணைப்பில் இது உள்ளதால் இந்த இரு நாடுகளும் அதில் வெற்றி பெற முடியவில்லை.

பேஷன் பிரியை...

பேஷன் பிரியை...

மிகவும் வித்தியாசமான பகுதி இந்த டிரான்ஸ்நியஸ்டரியா. இங்கு சர்வதேச கிரெடிட் கார்டுகள் எதுவுமே செல்லாது. எது வாங்குவதாக இருந்தாலும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். வெளிநாடுகளின் பணமும் கூட இங்கு செல்லாது. புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கக் கூட பெண்கள் முன்வர மாட்டார்கள், அதை விரும்பவும் மாட்டார்கள். இப்படிப்பட்ட பகுதியிலிருந்து வந்தவரான வெலரியா அதற்கு முற்றிலும் மாறாக மேக்கப், பேஷன் ஆகியவற்றில் நாட்டம் உள்ளவராக இருக்கிறார்.

பார்பி ஆசை...

பார்பி ஆசை...

வெலரியாவுக்கு பார்பி என்றால் கொள்ளை இஷ்டம். அதுபோலவே மாற வேண்டும் என்று இளம் வயதிலேயே உறுதி பூண்டு மாறியும் காட்டி உலகையே அதிசயிக்க வைத்தவர்.

ஆசிரியை...

ஆசிரியை...

வெலரியா இப்போது ஆசிரியையாக இருக்கிறார். அது ஒரு பேஷன் மற்றும் உடலைப் பொலிவாக வைத்திருக்கும் பயிற்சியை அளிக்கும் பள்ளியாகும். இது அவரது பார்பி மோகத்திற்கு பெரும் தீனியாக அமைந்தது, வசதியாகவும் போனது.

நடமாடும் பார்பி...

நடமாடும் பார்பி...

பார்பி தோற்றத்தில்தான் எப்போதும் காணப்படுகிறார் வெலரியா. மேலும் டிவி ஷோக்களில் பங்கேற்கிறார். புகைப்படங்களுக்கு போஸ் தருகிறார். ஒரு தேவதையாக, நட்சத்திரமாக, நடமாடும் பார்பியாக வலம் வருகிறார்.

குழந்தைகள்...

குழந்தைகள்...

இவருக்குத் திருமணமும் ஆகி விட்டது. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறி விட்டுத்தான் திருமணமே செய்தாராம். தனது உடல் அழகு கெடுவதை அனுமதிக்க முடியாது என்பது இவரது வாதம்.

மிஸ் டயமண்ட் கிரவுன் ஆப் தி வேர்ல்ட்...

மிஸ் டயமண்ட் கிரவுன் ஆப் தி வேர்ல்ட்...

2007ம் ஆண்டு மிஸ் டயமன்ட் கிரவுன் ஆப் தி வேர்ல்ட் என்ற பட்டத்தை வென்றார் வெலரியா. இதில் 300 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். அப்போதெல்லாம் அழகான பார்பி போல அப்படியே தத்ரூபமாக இருந்தவர் வெலரியா.

இயற்கை அழகு...

இயற்கை அழகு...

அப்போது பலரும் அவர் காஸ்மெடிக் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் என்று பேசினார்கள். ஆனால் அதனை மறுத்தார் வெலரியா. இது இயற்கையானது என்று விளக்கம் தந்தார் வெலரியா.

தீவிர முயற்சி...

தீவிர முயற்சி...

ஆனால் அந்தப் போட்டிக்குப் பின்னர் முற்றிலும் பார்பியாக மாறும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தினார். இதனால் அவரது இடை மேலும் குறைந்தது, மூக்கு மேலும் சிறிதானது, கண்கள் மேலும் பெரிதாகின.

டயட்...

டயட்...

தனது தோற்றப் பொலிவுக்காக பின்னர் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையும் செய்தார் வெலரியா. கான்டாக்ட் லென்ஸ் அணியத் தொடங்கினார். மேக்கப்பைக் கூட்டினார். கடுமையான டயட்டைக் கடைப்பிடித்தார்.

அறுவைச் சிகிச்சை...

அறுவைச் சிகிச்சை...

ஒரு பொம்மை போல தோன்றுவதற்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் விழுந்து விழுந்து செய்தார். தனது மார்பகத்திலும் கூட அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் அவர். மேலும் மூக்கையும் கூட அறுவைச் சிகிச்சை மூலம்தான் மாற்றியைத்தார். இடுப்பிலும் கூட அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். உதடுகளையும் கூட அறுவைச் சிகிச்சை மூலம் மாற்றியுள்ளார்.

அது பொம்மை....

அது பொம்மை....

இந்த மனித பார்பி பொம்மைக்கு இப்போது வயது 29 ஆகிறது.. 50 வருடங்களுக்கு முன்பு அறிமுகமான பார்பி இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார்.. காரணம் அது பொம்மை. ஆனால் இந்த வெலரியாவும் வயது கூடக் கூட அழகு குறையாமல் அப்படியே பார்பி போலவே இருப்பாரா.. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.. காத்திருப்போம். அதுவரை பார்த்திருப்போம்.

English summary
The most well-known and successful examples of the pursuit of the doll image is Valeria Lukyanova, ‘the Human Barbie’, together with her male counterpart, Justin Jedlica
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X