For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைஜீரியா: தீவிரவாதிகளின் தாக்குதலில் தொடர்ந்து சிக்கிப் பலிகடாவாகும் மாணவர்கள்

Google Oneindia Tamil News

Boko Haram kill 45 students, abduct 16 girls in Nigeria school massacre
லாகோஸ்: நைஜீரியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அப்பாவி மாணவர்கள் பலர் பலியாகி வருவது வேதனையை அதிகரித்துள்ளது.

நேற்றிரவு நைஜிரியாவில் பள்ளி ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 45 மாணவர்கள் பலியாகியுள்ள நிலையில், கடத்தப்பட்ட 16 மாணவிகளின் நிலை என்னவாயிற்று என்பது குறித்தான அச்சம் அங்குள்ளவர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

போகோ ஹாரம்....

நைஜிரியாவில் அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது போகோ ஹாராம் என்ற தீவிரவாத இயக்கம். இந்த இயக்கம் நைஜிரியாவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வடக்கு பகுதியில் அவர்களுக்கு என தனி இஸ்லாமிக் மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்று போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர்நிலைப் பிரகடனம்....

இதனால் அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள யோபி மாநிலம் உள்பட 3 மாநிலங்களில் கடந்த வருடம் மே மாதம் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ராணுவ நடவடிக்கை...

மேலும், அங்கு தீவிரவாதிகளை ஒடுக்கும் விதமாக ராணுவம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தீவிரவாதிகளும் பதில்த் தாக்குதல் நடத்தி வருகின்றனார்.

பள்ளி மீது தாக்குதல்...

இந்நிலையில், யோபி மாநிலத்தில் தாமதுரு என்ற இடத்தில் உள்ள பள்ளிக்குள் நேற்றிரவு புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு தூங்கி கொண்டு இருந்த மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், வகுப்பு அறைகளுக்கு தீ வைத்தும் எரித்துள்ளனர்.

மாணவிகள் கடத்தல்....

இதில், 45 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 16 மாணவிகளையும் கடத்தி சென்றுள்ளனர்.

தேடுதல் வேட்டை....

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாநில போலீசார் இறந்தவர்கள் அனைவரும் மாணவர்கள் தானா என்று உடனடியாக உறுதி செய்ய இயலாது என தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் உடல்கள் அங்கு மருத்துவமனையில் கருகிய நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவிகளை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கண்டனம்...

தீவிரவாதிகளின் இத்தாக்குதலுக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதலால் அந்நாட்டு அதிபருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விவசாயக் கல்லூரி மாணவர்கள்....

இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் மாதம் விவசாய கல்லூரி மாணவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் தடை....

போகோ ஹாராம் இயக்கம் தீவிரவாத இயக்கமாக அமெரிக்காவிலும் தடை செய்யப் பட்டுள்ளது.

English summary
The militant outfit Boko Haram staged yet another brutal show of terror when dozens of them attacked a boarding school in Nigeria's Yobe state after midnight, shooting and burning to death at least 45 students, who were asleep in their dormitories, unmindful of the onslaught.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X