For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு: பொலிவியா பிரகடனம்

By Mathi
Google Oneindia Tamil News

லாபாஸ்: காஸா மீது இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக பொலிவியா பிரகடனப்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை அரபு நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.

Bolivia declares Israel terrorist regime

பொலிவியா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கான தூதர்களை வாபஸ் பெற்றன. இந்த நிலையில் இஸ்ரேலை பொலிவியா, ஒரு பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம். அந்த நாட்டுடனான விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படும் என்றார்.

அதாவது 1972ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, பொலிவியாவுக்குள் இஸ்ரேலியர்கள் விசா இன்றி செல்ல முடியும். ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது பொலிவியா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bolivia has declared Israel a “terrorist state” and revoked a visa exemption agreement with Tel Aviv in protest at the ongoing Israeli attacks on the besieged Gaza Strip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X