For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்தில் இன்று முழு சூரிய கிரகணம்: செல்பி எடுக்க வேண்டாம் என அட்வைஸ்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் இன்று முழு சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதால் பகல் நேரத்தில் வானம் இருண்டு காணப்படுகிறது.

இங்கிலாந்தில் இன்று முழு சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.24 மணிக்கு சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே செல்லத் துவங்கியது. காலை 9.30 மணிக்கு கிரகணம் உச்சத்தில் இருக்கும். அந்த நேரம் சூரிய வெளிச்சம் முற்றிலும் இருக்காது. இதனால் பகல் நேரத்தில் இரவு போன்று வானம் இருண்டு காணப்படும்.

Britain witnesses total solar eclipse today

யாரும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக யாரும் கிரகணத்தை செல்பி எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரகணத்தை பார்க்க இங்கிலாந்து மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் மேகம் வந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் இன்று மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின் அழகே அந்த வைர மோதிரம் போன்ற நிகழ்வு தான்.

இந்த சூரிய கிரகணம் கிரீன்லாந்து, ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் சில பகுதிகளில் தெரியும். இந்த ஆண்டின் ஒரே முழு சூரிய கிரகணம் இது தான். 2020ம் ஆண்டு வரை இன்னும் 4 முழு சூரிய கிரகணங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Britain skies have darkened as the country witnesses its first total solar eclipse of the year 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X