For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் பார்த்த அதே வேகத்தை இனி தேசிய அளவில் பார்ப்பீர்கள்: ஜப்பானில் மோடி பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

டோக்கியோ: குஜராத்தை சேர்ந்தவன் என்பதால் வணிகம் என் ரத்தத்தில் உள்ளது என்று ஜப்பான் தொழில் அதிபர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் ஜப்பான் நாட்டு தொழில் அதிபர்கள் மத்தியில் இன்று பேசினார். நிப்பான் கெய்டன்ரென் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய மோடி கூறுகையில்,

திறன் மேம்பாடு

திறன் மேம்பாடு

திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். திறன் மேம்பாட்டில் ஜப்பானின் வழியை பின்பற்ற விரும்புகிறோம்.

100 நாட்கள்

100 நாட்கள்

கடந்த 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கத் துவங்கிவிட்டன. நாங்கள் நல்லாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

வணிகம்

வணிகம்

குஜராத்தை சேர்ந்தவன் என்பதால் வணிகம் என் ரத்தத்திலேயே உள்ளது. ஜப்பானுடனான உறவு பழமையானது. ஆட்சி முறையில் தொழில்நுட்பத்தை புகுத்துவது குறித்து முயற்சி செய்கிறோம்

நூற்றாண்டு

நூற்றாண்டு

21வது நூற்றாண்டு ஆசியா உடையது. இதை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியா ஒரு இளமை துடிப்பு மிக்க நாடு.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

கடந்த 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு கஷ்ட காலமாக இருந்தது. ஆனால் அது குறித்து நான் விமர்சிக்க விரும்பவில்லை.

சாதனை

சாதனை

நாங்கள் வளர்ச்சி விகிதத்தை மாற்றியுள்ளோம். உள்கட்டமைப்பு, ரயில்வே துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழிவகுத்துள்ளோம். காப்பீட்டு துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ளோம்.

வேகம்

வேகம்

குஜராத்தில் பார்த்த அதே வேகத்தை இனி தேசிய அளவில் பார்ப்பீர்கள். இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்ய ஏதுவாக பிரதமர் அலுவலகத்தின் தலைமையில் சிறப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் மோடி.

இந்தி

இந்தி

ஜப்பான் தொழில் அதிபர்கள் மத்தியில் மோடி இந்தியில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Modi told that being a Gujarathi commerce is in his blood while addressing Japanese business leaders in Tokyo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X