For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைக்குப் போறீங்களா, போய்ட்டு வாங்க.. வீட்டைப் பத்திரமா பாத்துக்குவாங்க 'மின் அம்மா'...!

Google Oneindia Tamil News

லாஸ் வேகாஸ்: வீட்டைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள ஒரு அருமையான அம்மா கிடைத்து விட்டார்.. அவர்தான் 'மின் அம்மா'.. இது ஒரு ரோபோட்.

வீட்டை விட்டு கடைக்கோ அல்லது வெளியில் வேறு வேலையாகவோ போகும்போது தைரியமாக இந்த மின் 'அம்மா'வை நம்பிப் போய் விட்டு வரலாம். வரும் வரைக்கும் வீீட்டை படு பத்திரமாக பார்த்துக் கொள்ளும் இந்த குட்டி ரோபோட்.

வயர்லஸ் இணைப்புகளுடன் கூடிய இந்த ரோபோட், வீட்டைச் சுத்தப்படுத்துவதிலும், வீட்டுப் பக்கம் யாராவது சந்தேகத்திற்கிடமாக நடமாடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதிலும், செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது என்று ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் திறமை படைத்ததாம்.

பார்க்க அப்படியே பொம்மை மாதிரி

பார்க்க அப்படியே பொம்மை மாதிரி

பார்ப்பதற்கு அப்படியே ரஷ்ய நாட்டு நெஸ்டிங் டால் பொம்மை போலவே இருக்கிறது இந்த ரோபோட். இதற்கு மின் அம்மா என்று செல்லமாக பெயரிட்டுள்ளனர்.

செடிக்குத் தண்ணீர் ஊற்றியாயிற்றா...

செடிக்குத் தண்ணீர் ஊற்றியாயிற்றா...

இந்த ரோபோட், வீட்டு வேலைகளை படு சுத்தமாக செய்கிறதாம். செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, வீட்டைப் பெருபக்குவது, வீட்டுப் பக்கம் யாராவது நடமாடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது, பல் துலக்க பிரஷ் எடுத்துக் கொடுப்பது, அதில் பேஸ்ட் வைத்துத் தருவது என பலதையும் செய்கிறது.

தாயின் உணர்வோடு

தாயின் உணர்வோடு

ஒரு தாயின் உணர்வோடு அத்தனை வேலைகளையும் செய்வதால்தான் இதை மின் அம்மா என்று அழைக்கிறார்களாம்.

பிரெஞ்சுத் தயாரிப்பு

பிரெஞ்சுத் தயாரிப்பு

இந்த ரோபோட்டை பிரான்ஸைச் சேர்ந்த சென் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மதர் என்றே இந்த ரோபோட்டுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

16 செ.மீ உயரம்

16 செ.மீ உயரம்

இந்த ரோபோட்டானது 16 சென்டி மீட்டர் உயரத்தில் உள்ளது. ஒரே சமயத்தில் 24 வகையான வேலைகளை இது கண்காணிக்க முடியுமாம்.

மின் அம்மாவின் விலை 222 டாலர்

மின் அம்மாவின் விலை 222 டாலர்

நிஜ அம்மாவைத்தான் விலை கொடுத்து வாங்க முடியாது. விலை மதிப்பற்ற பொக்கிஷம் அம்மாதான்.. ஆனால் இந்த மின் அம்மாவின் விலையாக 222 டாலரை நிர்ணயித்துள்ளனராம்.

English summary
Resembling a Russian nesting doll, the pint-sized robotic device wants to be your "mother." The electronic device with wireless connectivity can transform any object in the home into a smart one. It can detect unexpected activity at the front door, keep track of watering of plants, and even ensure family members take their medicine or brush their teeth. Designed by the French startup Sen.se, it is called simply "Mother."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X