For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 ராணுவ ராடார்களை கடந்துள்ளது மலேசிய விமானம்: ஒருவர் கூடவா பார்க்கவில்லை?

By Siva
Google Oneindia Tamil News

செபாங்: மாயமான மலேசிய விமானம் தாய்லாந்து வளைகுடாவில் யு டர்ன் எடுத்து 3 ராணுவ ராடர்களை கடந்து சென்றதை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சீனாவுக்கு சென்ற மலேசிய விமானம் மாயமானது. அந்த விமானம் தாய்லாந்து வளைகுடாவில் பெரிய யு டர்ன் அடித்து திரும்பி குறைந்தது 3 ராணுவ ராடார்களை கடந்து வடக்கு மலேசியாவை அடைந்து நாட்டின் பெரிய நகரம் ஒன்றின் வழியாக பறந்து சென்று மலாக்கா ஜலசந்தி பக்கம் சென்றுள்ளது.

Evidence of missteps by Malaysia mounts, complicating flight search

இந்நிலையில் மலேசிய விமானப்படை கட்டுப்பாட்டு அறையில் இருந்த 4 பேர் விமானம் ஒன்று அனுமதி இன்றி வந்ததை கவனிக்காமல் இருந்துள்ளனர்.

விமானம் மலேசிய ராணுவ அதிகாரிகளின் கண்ணில்படாமல் அங்கு பறந்து சென்றுள்ளது என்பது வித்தியாசமாக உள்ளது. ஏன் அதிசயமாகக் கூட உள்ளது என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் ஒன்று ரேடாரில் இருந்து மாயமான சில மணிநேரத்திலேயே மலேசிய ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சிலர் கூறுவது போன்று விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருந்தால் தேடுதல் பணி சிரமமாகிவிடும். இந்நிலையில் மலேசிய அரசு கவனக்குறைவாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் மலேசிய அரசு உண்மையை மறைப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

English summary
Missing Malaysia airlines flight MH 370 took a wide u-turn in the Gulf of Thailand passing atleast three military radars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X