For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இம்ரான்கான் மீது ரூ. 20 பில்லியன் கேட்டு முன்னாள் நீதிபதி அவதூறு வழக்கு!

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் ரூ20 பில்லியன் கேட்டு முன்னாள் நீதிபதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் நடந்ததாகவும், அதனை அப்போதைய நீதிபதியான இப்திகார் முகமது சௌத்ரி தடுக்காததால் தனது எதிரிகள் வெற்றி பெற்றதாகவும் இம்ரான்கான் கூறியிருந்தார்.

Ex-CJ sends Rs 20bn libel notice to Imran

இக் குற்றச்சாட்டால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிபதி சௌத்ரியின் மகனான அர்சலன் இப்திகார், எம்.பி.யாக இருக்க தகுதியற்றவர் இம்ரான்கான் என்று கூறி சவால்விட்டார்.

தற்போது இம்ரானால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நீதிபதி சௌத்ரி ரூ. 20 பில்லியன் நட்ட ஈடு கேட்டு இம்ரான் கான் மீது அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் 2 வாரத்துக்குள் இம்ரான்கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் மனுவைத் திரும்பப் பெறுவதாகவும் நீதிபதி செளத்ரி கூறியுள்ளார்.

English summary
Lawyers of former chief justice Iftikhar Muhammad Chaudhry on Thursday sent a defamation notice worth 20 billion rupees to Pakistan Tehreek-e-Insaf (PTI) Chairman Imran Khan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X