For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்து மியூசியத்தில் “பேய்ய்ய்ய்ய்ய்...” – மெமரிகார்டில் பதிவான நிகழ்வு

Google Oneindia Tamil News

யார்க்: இங்கிலாந்தின் தம்பதியினர் மியூசியத்தில் எடுத்த புகைப்படத்தில் ஆவி போன்ற ஒரு உருவம் பதிந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இங்கிலாந்து மேற்கு யார்க்சையர் வேக் பீல்டை சேர்ந்த ஜான் பர்ன்சைடு- ஷோனா பேக்கவுஸ் தம்பதிகள் தங்களது 18 மாத மகன் " ஜான் தாடன்" உடன் யார்க் நகரில் உள்ள கேஸ்டில் பழங்கால மியூசியத்திற்கு சுற்றிபார்க்க சென்றனர்.

அங்குள்ள சில பழங்கால பொருட்கள் இருக்கும் இடத்தில் இருவரும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் சேர்ந்து பலவிதமான புகைப்படங்களை தங்கள் மொபைல் போனில் எடுத்துக்கொண்டனர்.

சும்மா கிடந்த மெமரி கார்ட்:

பின்னர் வீட்டிற்கு வந்த அவர்கள் போன் மெமரி கார்டை எடுத்து வைத்து விட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக அந்த மெமரிகார்டை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

குட்டி "பேய்":

கடந்த 2 நாட்களுக்கு முன் தம்பதியினர் இருவரும் மெமரி கார்டை எடுத்து அதில் எடுத்த புகைப்படங்களை பார்த்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. அவர்கள் எடுத்த ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒரு சிறுமியின் உருவம் விழுந்து உள்ளது.

கருப்பு-வெள்ளை உருவம்:

அவர்கள் படம் பிடித்துள்ள அனைத்து புகைப்படங்களிலும், அந்த சிறுமியின் உருவம் கருப்பு, வெள்ளையில் பதிவு ஆகியுள்ளது. இது தங்களுக்கு ஆச்சரியத்தையும் , அதிர்ச்சியையும் கொடுப்பதாக தம்பதிகள் கூறியுள்ளனர்.

போட்டோவில் பேய்:

தம்பதிகள் சிறுமியின் உருவம் பதிவு பெற்ற புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். ஏராளமானோர் அந்த புகைப்படங்களை பார்த்து கமெண்ட் அளித்து வருகின்றனர்.

அந்த பழங்கால மியூசியத்தில், முன்னர் பேய் பிசாசுகள் இருந்ததாக கூறபட்டது.

சிறிய பெண்ணின் ஆத்மா:

இது குறித்து ஜான் பர்ன்சைடு, "முதலில் நாங்கள் எதையும் கவனிக்க வில்லை. அது மிக வித்தியாசமாக இருந்தது. நான் இது கற்பனை என நினைத்தேன். அந்த உருவம் மிகவும் சிறியபெண்.

இரந்து போன தங்கையோ?:

நான் உடனடியாக எனது தாய்க்கு போன் செய்தேன் முதலில் இறந்து போன எனது தங்கையாக இருக்கலாம் என நினைத்தேன். பேய் பிசாசுகள் என்று கூறுவது எனக்கு பிடிக்கவில்லை. அது எனக்கு பயத்தை கொடுக்கிறது.

உண்மையா தெரியவில்லை:

இது குறித்து மியூசிய அதிகாரி கூறும் போது அவர்கள் எவ்வளவு எண்ணிக்கையில் படம் பிடித்தார்கள் என தெரியவில்லை. மேலும் அதில் எத்தனை படத்தில் இவர் குறிப்பிட்ட உருவம் இருக்கிறது எனவும் தெரியவில்லை.

சும்மா "லுலுலு" ஆக இருக்கலாம்:

இது போன்ற புகைப்படங்களின் உள்ளே சில உருவங்களை கொண்டு வருவது தொடர்பான மொபைல் அப்ளிகேஷன்ஸ் அதிகரித்து வருகிறது . அதனால் அதை விளம்பரத்திற்காகவும் செய்து இருக்கலாம் என்றார்.

English summary
A family visiting a Victorian museum claim they got a little closer to history than they bargained for after a ghost girl appeared in the background of their photos.John Burnside and Shona Backhouse, of Wakefield, took their son Johnthomas, now three, to the Castle Museum in York two years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X