For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவில் போர் விமானம் நொறுங்கி விழுந்தது.. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவின் தென் பகுதியில் ஒரு போர் விமானம் இன்று விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக ரஷ்ய விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் விமானத்தை செலுத்திய விமானி பலியாகி விட்டார். எம்ஐஜி 29 என்ற அந்தப் போர் விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும். பழுது காரணமாக விபத்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த வகை போர் விமானம் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சில முறையும் இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. தற்போது நடந்த விபத்தால் ரஷ்ய விமானப்படையினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1980 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இவ்விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கூட சைபீரியாவில் இந்த ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

சமீப காலமாக உலகின் சில பகுதிகளில் விமான விபத்துக்கள் நடந்து வருகின்றன. உக்ரைன் மீது பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தினர். இந்த நிலையில் ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 1980 made Fighter jet fell down in Russia's southern part. Technical fault is seen as the reason for the mishap.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X