For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது அருந்தும் கர்ப்பிணிகள்... போதைக்கு அடிமையாகி பிறக்கும் இங்கிலாந்து குழந்தைகள் - அதிர்ச்சித் தகவல

Google Oneindia Tamil News

லண்டன்: கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்குவதாகவும், இதனால் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாகவும் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

பொதுவாக கருவுற்றிருக்கும் பெண்கள் சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுவதுண்டு. ஆனால், சில நாடுகளில் கர்ப்பிணிகள் தங்களது உடற்சூட்டை கருத்தில் கொண்டு மது அருந்துகின்றனர். ஆனால், மேலும் சிலரோ போதைக்காக மது அருந்துகின்றனர்.

இவ்வாறு கர்ப்பிணிகள் அருந்தும் மது வயிற்றில் உள்ள குழந்தைகளை போதைக்கு அடிமையாக்குவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சுகாதார அமைப்பு...

சுகாதார அமைப்பு...

இங்கிலாந்தில் மது அருந்தும் கர்ப்பிணிகள் குறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே போதையின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

அப்பாவிக் குழந்தைகள்...

அப்பாவிக் குழந்தைகள்...

கருவுற்ற நிலையில் இந்த குழந்தைகளின் தாய்கள் ஹெராயின், கொக்கைய்ன் போன்ற கொடிய போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததால், எந்தப் பாவமும் அறியாத அப்பாவி குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த போதைப் பழக்கம் பரவி விடுவதாக அந்த ஆய்வு கூறுகின்றதுதெரிவித்துள்ளது.

சமுதாயத்தையே பாழ் படுத்துகிறது...

சமுதாயத்தையே பாழ் படுத்துகிறது...

பெண்களின் கொடிய போதைப் பழக்கம் அவர்களை மட்டுமின்றி, அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாழ்படுத்தி விடுவதாக அந்த ஆய்வு கவலை தெரிவித்துள்ளது.

7,800 குழந்தைகள்...

7,800 குழந்தைகள்...

கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இவ்வாறு போதைக்கு அடிமையாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,800 என அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் அதிகம்...

இங்கிலாந்தில் அதிகம்...

இதன்படி, வேல்ஸ் மாகாணத்தில் 464 குழந்தைகளும், ஸ்காட்லாந்தில் 738 குழந்தைகளும், இங்கிலாந்தில் 6,599 குழந்தைகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்துள்ளதாக அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

English summary
London: Four babies are born addicted to drugs in the United Kingdom every day, media reports said today quoting National Health Service (NHS) figures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X