For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிக வரிக்கு நூதன எதிர்ப்பு – 30 கிலோ கிராம் நாணயங்களை மூட்டைகட்டி வரியாய் செலுத்திய பிரான்ஸ் பெண்!

Google Oneindia Tamil News

கிரேநோபில்: பிரான்ஸ் நாட்டில் வசூலிக்கப்படும் அதிகப்படியான வரியை எதிர்த்து 30 கிலோ கிராம் நாணயங்களை வரியாக செலுத்தியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் வசித்து வரும் 28 வயது கொண்ட ஆட்ரி டி என்பவர் அரசாங்கம் பொதுமக்களிடம் வசூலிக்கும் அதிகப்படியான வரி விதிர்ப்பிற்கான தனது எதிர்ப்பை நூதனமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

முந்தைய ஆண்டின் வருமானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இவர்களுக்கான வரித்தொகையை அந்நாட்டு மக்கள் செலுத்த வேண்டும்.

வருமானத்தைவிட அதிக வரி:

வேலையில்லாத இவரது கடந்த ஆண்டு வருமானம் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 1400 யூரோக்கள் ஆகும். இதனால் இந்த ஆண்டு 1107 யூரோக்கள் அவருக்கான வரித்தொகையாக விதிக்கப்பட்டிருந்தது.

காரை விற்று வரி:

இதனை சரியான நேரத்தில் கட்டுவதற்காக தனது காரை விற்க நேர்ந்ததாக ஆட்ரி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தவணைகள்:

ஒரே தவணையில் இந்தப் பணத்தை செலுத்த எடுத்து சென்றபோது ஒரு தவணையில் 300 யூரோக்கள் மட்டுமே கட்டமுடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டதால் மூன்று தவணை முதலில் கட்டியுள்ளார்.

30 கிலோகிராம் நாணயங்கள்:

அதன்பின்னர் மீதமுள்ள 207 யூரோக்களையும் நாணயங்களாக மாற்றிச்சென்று அதிகாரி முன் அளித்துள்ளார். இந்த நாணயங்கள் மொத்தம் 30 கிலோ கிராம் எடை இருந்துள்ளது.

வங்கி நண்பர் உதவி:

தனது வங்கி நண்பர் ஒருவர் உதவியுடன் சேகரித்த நாணயங்களை வரி அலுவலக அதிகாரிமுன் இவர் கொட்டியபோது முதலில் அவரை வித்தியாசமாகப் பார்த்தபோதும் அந்த அதிகாரிகள் பின்னர் இந்த நாணயங்களை எண்ணி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதிக வரி குறித்து கடிதம்:

இந்த அதிகப்படியான வரிவிதிப்பு குறித்து பிரான்சின் அதிபர் பிரான்க்காய்ஸ் ஹாலண்டேவுக்கும், நிதி அமைச்சர் மைக்கேல் சபினுக்கும் கூட கடிதம் எழுதியுள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
A disgruntled taxpayer in southern France paid her annual bill using 30 kilograms(66 pounds) of small change in protest at the way taxes are collected. The unemployed 28-year-old woman, who gave her name only as Audrey D., had to pay 1,107 euros ($1,435) in tax on her 2013 salary, which was on average 1,400 euros.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X