For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகத் தலைவர்களே.. காஸாவிலிருந்து ஒலிக்கும் இந்த 10 வயது சிறுவனின் குரலைக் கேளுங்கள்!

Google Oneindia Tamil News

காஸா: காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இன்னுயிரை இழந்தது மட்டுமல்லாமல் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இதுவரை இல்லாத வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

காஸாவில் உள்ள மருத்துவமனைகளின் குழந்தைகள் பிரிவானது நிரம்பிக் காணப்படுகின்றது.

குழந்தைகள் பிரிவு:

குழந்தைகள் பிரிவு:

அல் ஸபி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 வயதான குழந்தை நூர். பெயிட் கானூனில் அமைந்துள்ள யுனைடெட் நேஷன்ஸ் பள்ளியில் படித்துவந்தவர்.

மேலும் இருவர்:

மேலும் இருவர்:

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நிமிடமே நூருக்கு அருகில் அனுமதிக்கப்பட்டனர் கலீத் மற்றும் யாமின் ஜபீர் என்ற 4 வயதான இரண்டு குழந்தைகள்.

500 பேர் குழந்தைகள்:

500 பேர் குழந்தைகள்:

காஸாவில் உயிரிழந்த 1400 பேரில், 500 பேர் குழந்தைகள் என்று ஐநா சபை தெரிவித்துள்ளது.

குண்டு துளைத்த குழந்தை:

குண்டு துளைத்த குழந்தை:

மார்சூப் மோஷா எல் வான் என்ற 6 வயது குழந்தை தன்னுடைய கல்லீரலில் குண்டு துளைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றது.

வலிதரும் புகைப்படம்:

வலிதரும் புகைப்படம்:

இக்கொடுமைகளை யாருமே விவரிக்க வேண்டாம் பாதிக்கப்பட குழந்தைகளின் புகைப்படங்களே அவர்களின் நிலைமையை எடுத்துக் கூறி விடுகின்றன.

முகமது அலைலா:

முகமது அலைலா:

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 வயது சிறுவனான முகமது அலைலாவின் தாயிடம் பேசிய போது, அச்சிறுவன் மருத்துவமனை படுக்கையில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்துள்ளான்.

வாழ கொடுத்து வைக்கவில்லை:

வாழ கொடுத்து வைக்கவில்லை:

மெல்லியதாக அசைந்த உதடுகளுடன் முகமது, " நான் வலியை உணர்கின்றேன் ஏனெனில் காஸாவின் குழந்தைகளுக்கு சுதந்திர பூமியில் வாழ கொடுத்து வைக்கவில்லை. நான் நம்புகின்றேன். விரைவில் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும்.

எங்களுக்கும் வேண்டும் சுதந்திரம்:

எங்களுக்கும் வேண்டும் சுதந்திரம்:

காஸாவின் குழந்தைகளுக்கு சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லையா என்ன? மற்ற குழந்தைகள் மூலமாக ஏன் எங்களால் வாழ முடியவில்லை? உலகின் தலைவர்களிடம் நான் கேட்கின்றேன். எங்களுக்கான சுதந்திரமான வாழ்க்கையை அளியுங்கள்".

செய்வது சரிதானா? :

செய்வது சரிதானா? :

வலியும், வேதனையும் நிரம்பிய மனதுடன் முகமது கூறிய இவ்வரிகள் இஸ்ரேல் மட்டுமல்ல மற்ற எல்லா நாடுகளுக்குமான சாட்டையடி வார்த்தைகள்தான். எதிர்கால சந்ததியினருக்கு நாம் காட்டும் வழி வன்முறையும், கொலைகளும்தான் என்பதுதான் நெஞ்சைக் கிழிக்கும் உண்மை.

English summary
Pressure to arrive at a ceasefire has been prompted by the very large number of children wounded or killed in the Gaza violence, more than at any time in the past. The vulnerability of Gaza's young is nowhere more evident than the children's ward of Gaza's biggest hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X