For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திடீர்னு குறுக்கே வந்த 'பேய்' கார்.. இன்டர்நெட்டைக் கலக்கும் வீடியோ!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு போக்குவரத்து சிக்னில், பச்சை விளக்கு எரிந்தவுடன் புறப்பட்ட ஒரு பிஎம்டபிள்யூ காருக்கு முன்பு திடீரென ஒரு கார் தோன்றி கிராஸ் செய்ததால் பிஎம்டபிள்யூ காரில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி காரை நிறுத்தி விட்டனர்.

எப்படி அந்தக் கார் திடீரென வந்தது என்பது தெரியவில்லை. இதுதொடர்பான வீடியோதான் தற்போது இணையதளங்களைக் கலக்கி வருகிறது.

அந்தக் காருக்கு பேய்க் கார் என்றே பெயர் வைத்து இணையதளங்களில் வீடியோ படு வேகமாக பரவி வருகிறது.

பாழடைஞ்ச பங்களா.. இல்லாட்டி புளிய மரம்

பாழடைஞ்ச பங்களா.. இல்லாட்டி புளிய மரம்

வழக்கமாக பேய்கள், ஆவிகள் பாழடைந்த பங்களா, ஆள் நடமடாட்டம் இல்லாத வீடுகள், சாலையோர புளிய மரம் இப்படி ஏதாவது ஒன்றில்தான் வாசம் செய்யும் என்று நாம் குட்டிக் குழைந்தைகளாக இருந்தது முதலே காது குத்தி வந்துள்ளது இந்த உலகம்.

இது ரொம்ப் புதுஸ்ஸா இருக்கே

இது ரொம்ப் புதுஸ்ஸா இருக்கே

ஆனால் ஒரு கார் திடீரென நடு ரோட்டில் முளைத்து சர்ரென்று கிராஸ் செய்து போன சம்பவம் வினோதமாக உள்ளது.

ரொம்ப மாடர்ன் பேய் போல

ரொம்ப மாடர்ன் பேய் போல

இந்தப் பேய் ரொம்ப மாடர்ன் போல. ஹை டெக் பேயான இதுகுறித்துத்தான் இப்போது இணைய உலகமே கதைகதைத்து வருகிறது, பதை பதைத்துப் போய்.

நடு ரோட்டில்..

நடு ரோட்டில்..

அந்த மாஸ்கோ நகரத்து சாலையில் நடந்த சம்பவம் இதுதான்.. ஒரு போக்குவரத்து சிக்னலில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று சிக்னலுக்காக காத்திருக்கிறது.

கிரீன் விழுந்ததும்

கிரீன் விழுந்ததும்

கிரீன் சிக்னல் கிடைத்ததும் அந்தக் கார் மெதுவாக நகருகிறது. சாலையில் வேகமாக ஓடத் தொடங்கும்போது...

திடீரென முளைத்த புதுக் கார்

திடீரென முளைத்த புதுக் கார்

திடீரென ஒரு புதிய கார் அந்த பிஎம்டபிள்யூ காருக்கு முன்பாக தோன்றி சர்ரென்று குறுக்கே பாய்கிறது. இதைப் பார்த்து பிஎம்டபிள்யூ காரில் இருந்தவர்கள் அலறிக் கத்துகிறார்கள். கார் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தப்படுகிறது.

எப்படி வந்தது அந்தக் கார்

எப்படி வந்தது அந்தக் கார்

எப்படி அந்த திடீர் கார் சாலையில் நட்ட நடுவே வந்தது என்பது தெரியவில்லை.

பிஎம்டபிள்யூவுக்குப் பின்னர் வந்த காரிலிருந்து ஷூட்

பிஎம்டபிள்யூவுக்குப் பின்னர் வந்த காரிலிருந்து ஷூட்

இந்த மர்மக் கார் கிராஸ் செய்வதை பிஎம்டபிள்யூ காருக்குப் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் வீடியோவில் படமாக்கியுள்ளனர். இதை யூடியூபிலும் போட்டுள்ளனர்.

இதுவரைக்கும் 20 லட்சம் பார்வை

இதுவரைக்கும் 20 லட்சம் பார்வை

இந்த வீடியோவை இதுவரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

பேய் அல்லப்பா..

பேய் அல்லப்பா..

பலர் இது பேய்க் கார் அல்ல.. பிஎம்டபிள்யூ காருக்கு முன்பாக அது வந்திருக்கலாம். அது நமது பார்வையில் தெரியவில்லை. அது கடந்தபோது திடீரென வந்தது போலத் தெரிகிறது என்று கூறியுள்ளனர்.

நீங்க என்ன நினைக்கிறீங்க...

திடீர்னு குறுக்கே வந்த 'பேய்' கார்.. இன்டர்நெட்டைக் கலக்கும் வீடியோ!

திடீர்னு குறுக்கே வந்த 'பேய்' கார்.. இன்டர்நெட்டைக் கலக்கும் வீடியோ!

English summary
Ghosts are known to haunt old castles, graveyards and other places where there have been terrible tragedies or miscarriage of justice. But on the streets of Russia, ghosts appear to have gone hi-tech and have taken to driving ghost cars. In a dashcam video that was uploaded to YouTube on March 13, this year, a ghost car suddenly appears in front of another car. The video footage of the Russian 'ghost car' has understandably enough left viewers around the world trying to figure out where the car came from.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X