For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்வெளிப் பயணங்களுக்கு இந்த "கிளாஸ்" சரிப்பட்டு வராதாம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விண்வெளிப் பயணங்கள் போன்றவற்றுக்கு கூகுள் கிளாஸ் சரிப்பட்டு வராது, பொருந்தாது, சரியாக இருக்காது என்று நாசா தெரிவித்துள்ளது.

இதை நாசா விண்வெளி வீரர்கள் குழு ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. விண்வெளிப் பயணங்களில் கூகுள் கிளாஸைப் பயன்படுத்துவது சரியாக இருக்குமா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், பரிசோதனைகளை நாசா குழு மேற்கொண்டு வந்தது.

இதற்காக நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் பல நாட்கள் தங்கியிருந்து விண்வெளி வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர். விண்வெளி சூழலை உருவாக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஐபேட் ஓகே....

ஐபேட் ஓகே....

இந்த சோதனையின்போது கூகுள் கிளாஸ் தவிர ஐபேடும் கூட சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் ஐபேடை விண்வெளி சூழலில் பயன்படுத்த முடியும், ஐபேட் விண்வெளிப் பயன்பாட்டுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது என்று தெரிய வந்ததாம்.

கூகுள் கிளாஸ் சரியில்லை...

கூகுள் கிளாஸ் சரியில்லை...

ஆனால் கூகுள் கிளாஸ் சரிப்பட்டு வரவில்லை. விண்வெளி சூழலுக்குப் பொருத்தமானதாக அது இல்லை என்று தெரிய வந்துள்ளது.

டிஸ்பிளே சரியில்லை...

டிஸ்பிளே சரியில்லை...

இதுகுறித்து விண்வெளி வீரர்கள் குழு கூறுகையில், கூகுள் கிளாஸ் என்பது நல்ல வளர்ச்சிதான். ஆனால் அதன் பேட்டரி சற்று மோசமாக உள்ளது. மேலும் டிஸ்பிளேயும் சரியில்லை.

பரிசீலிக்கலாம்...

பரிசீலிக்கலாம்...

எனவே இதை நடைமுறைக்கு விண்வெளியில் பயன்படுத்துவது இப்போதுள்ள முறையில் சற்று கடினம். பொருத்தமாக இல்லை. இதில் மாற்றம் வந்தால் பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ரீடிங்கில் தோல்வி....

ரீடிங்கில் தோல்வி....

வீடியோ பதிவில் கூகுள் கிளாஸ் பாஸ் செய்து விட்டதாம். ஆனால் ரீடிங் விஷயத்தில்தான் தோல்வியடைந்து விட்டதாம்.

கூகுள் கிளாஸ் சோதனை...

கூகுள் கிளாஸ் சோதனை...

நீமோ 18 ( NEEMO 18 ) என்ற பெயரில் நாசா அறிமுகப்படுத்தியுள்ள நீருக்கு அடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆய்வகத்தில் பல்வேறு வகையான பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இந்த ஐபேட் மற்றும் கூகுள் கிளாஸ் சோதனையும் நடந்துள்ளது.

நாசா ஆய்வகம்...

நாசா ஆய்வகம்...

புளோரிடா கடற்கரைக்கு அப்பால் இந்த நீருக்கு அடியில் அமைந்துள்ள ஆய்வகத்தை நாசா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The upcoming eye wearable device Google Glass is "not an optimal tool" for handling operational procedures and tasks in a simulated space environment, NASA astronauts have revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X