For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரவேற்பறையை வண்ணமயமாக்க வருகிறது கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு டிவியை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் செல்போனில் கிடைத்த ஆண்ட்ராய்டு வசதிகள் இனிமேல் டிவிக்களிலும் கிடைக்கும். இதனால் வரவேற்பரை ஹைடெக் வசதிகளால் இனிமேல் வண்ணமயமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு அபாரம்

ஆண்ட்ராய்டு அபாரம்

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பிளாட்பாரம், மொபைல்போன் வாடிக்கையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில், நமக்கு தேவைப்படும் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்துகொள்ள முடியும் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆப்பிள் அப்பால போயாச்சு..

ஆப்பிள் அப்பால போயாச்சு..

ஆப்பிள் ஐஓஎஸ், நோக்கியா விண்டோஸ் ஸ்டோர் போன்றவற்றைவிட ஆண்ட்ராய்ட் மிகவும் பிரபலமாக உள்ளது.

பெரிய திரைக்கு கூகுள்

பெரிய திரைக்கு கூகுள்

இந்நிலையில் கூகுள் தனது முத்திரையை சின்னத்திரையில் (செல்போன்) இருந்து பெரிய திரையில் (டி.வி ) பதிக்க உள்ளது. இதற்காக ஆண்ட்ராய்டு டிவி என்ற பெயரிலான செட் ஆப் பாக்ஸ்களை அது வெளியிடுகிறது.

டவுன்லோடு வசதி

டவுன்லோடு வசதி

இணையதள வசதியுடன் இயங்கும் ஸ்மார்ட் டிவிக்கள் இப்போது சந்தையில் அமர்க்களமாக விற்பனையாகிக்கொண்டுள்ளன. இந்த தொலைக்காட்சிகளில் கூகுளின், ஆண்ட்ராய்டு செட்-ஆப் பாக்ஸை பொறுத்திக்கொண்டு நினைத்த அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்து அதை தொலைக்காட்சியில் கண்டு முடியும்.

யூடூப்.. ஸ்கைப்.. பேஸ்புக்.. அடடே..

யூடூப்.. ஸ்கைப்.. பேஸ்புக்.. அடடே..

நெட்ப்ளிக்ஸ், பன்டோரா, யூடூப், ஹேங்அவுட்ஸ், பிளேமூவிஸ், ஸ்கைப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை டவுன்லோடு செய்து தொலைக்காட்சியில் கண்டு ரசிக்க முடியும்.

வசதியான டிவிகள்

வசதியான டிவிகள்

சோனி நிறுவனத்தின், பிராவியா டபிள்யூ 700, போன்ற மாடல்களில் இப்போது அப்ளிகேசன்களை டவுன்லோடு செய்யும் வசதியுள்ளபோதிலும், ஆன்ட்ராய்ட் பிளாட்பார்ம் அதிகப்படியான அப்ளிகேசன்களை அள்ளி வழங்கும். இந்த செட் ஆப் பாக்ஸ்கள், சோனி, பிலிப்ஸ், ஷார்ப் உள்ளிட்ட முன்னணி டிவிகளில் செயல்படும். இன்னும் சாம்சங் டிவிகளுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படவில்லை.

ஆப்பிள் டிவி

ஆப்பிள் டிவி

ஏற்கனவே ஆப்பிள் டிவி என்ற பெயரில் ஆப்பிள் செல்போன் நிறுவனம் தயாரித்துள்ள செட் ஆப் பாக்ஸ்கள் எப்படி ஆப்பிள் நிறுவன ஐஓஎஸ் பிளாட்பார்மில் இயங்குகிறதோ அதைப்போல, கூகுள் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்மில் இயங்க உள்ளது.

English summary
Google’s no stranger to the space. Google TV, Google’s first attempt at a set-top box, failed to gain traction despite integration with televisions from LG and other manufacturers. Without software updates or new partnership announcements, it seems to have died a quiet death over the past few years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X