For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

26ம் தேதி குவைத்தில் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(கே-டிக்) நடத்தும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(கே-டிக்) புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் 26.9.2014 அன்று குவைத், கைத்தான் பகுதியில் உள்ள கே-டிக் தமிழ் குத்பா பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

Haj special programme in Kuwait on sept. 26th

நண்பகல் 12 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிகள் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும். நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் ஆலிம் மற்றும் அறிஞர் பெருமக்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

English summary
Haj special programme will be held in K-Tic mosque in Kuwait on september 26th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X