For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன பெரும் பணக்காரர்களில் பாதிப்பேர் நாட்டை விட்டு வெளியேற திட்டம்

By Siva
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் பாதிப்பேர் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

பார்க்ளேஸ் வெல்த் நிறுவனம் சீனாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் 2 ஆயிரம் பெரும் பணக்காரர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கணக்கெடுப்பின் முடிவுகளின் விவரம் வருமாறு,

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 47 சதவீதம் பேர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ஹாங்காங்

ஹாங்காங்

சீனாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள பெரும் பணக்காரர்களில் 30 சதவீதம் பேர் ஹாங்காங்கில் செட்டிலாக விரும்புகிறார்கள். இதையடுத்து 23 சதவீதம் பேர் கனடாவில் செட்டிலாக விரும்புகிறார்கள்.

எதற்கு?

எதற்கு?

தங்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கவே வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவதாக சீன பெரும் பணக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

ஹாங்காங்கில் வசிக்கும் பணக்காரர்களில் 16 சதவீதம் பேர் வேறு நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதில் 44 சதவீதம் பேர் சிங்கப்பூரிலும், 31 சதவீதம் பேர் சீனாவிலும் செட்டிலாக திட்டமிட்டுள்ளனர்.

English summary
According to a survey, half of China's super-rich individuals have planned to leave the country within next five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X