For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறிய ரக ஜோனாதன்...மகன் பிறந்ததை 'ஆப்பிள்’ ஸ்டைலில் விளம்பரமாக்கிய முன்னாள் ஊழியர்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு குழந்தை பிறந்த விசயத்தை வித்தியாசமாக இணையத்தில் விளம்பரப் படுத்தியுள்ளார்.

மொபைல் போன்கள் சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இந்நிறுவனம் புதிதாக ஒரு தயாரிப்பை வெளியிட்டால் அது குறித்த தகவலை தனது இணையதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அதில், அப்புதிய படைப்பின் சிறப்பு தன்மைகள் மற்றும் அதனை குறித்த விரிவான விளக்கங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

அந்தவகையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை வித்தியாசமாக தன் நண்பர்களுக்குத் தெரியப் படுத்தியுள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆண்ட்ரியாஸ் கிளெய்ன்க் என்ற நபர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக கிளெய்ன்க்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன் மகன் பிறந்ததை நண்பர்களுக்குத் தெரியப்படுத்த தனியாக வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளார் கிளெய்ன்க்.

தனது மகன் குறித்து அந்த இணையதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

புதிய ஜோனாதன்...

புதிய ஜோனாதன்...

புதிய சிறிய ரகம் ஜோனாதன் அறிமுகம். ஜோனாதன் (2014 வருட படைப்பு) 20 இன்ச் நீளமுள்ள ஒரே உடல் அமைப்பு கொண்ட திடமான அழகினை உடையது.

பன்முகத் தொடுதல்...

பன்முகத் தொடுதல்...

ஒழுங்கான 10 விரல்கள் நேர்த்தியான பன்முக தொடுதல் அனுபவம் தர கூடியது.

2 கேமராக்கள்...

2 கேமராக்கள்...

கூடுதலாக, ஒன்று அல்ல பார்வை திறன் கொண்ட இரு கேமிராக்களை கொண்டது. ஒவ்வொன்றும் ரெடினா ரெசல்யூசனில் திகைக்க வைக்கும் படங்களை தருவது.

மைக்ரோபோன்கள்...

மைக்ரோபோன்கள்...

இரு மைக்ரோபோன்கள் இரு புறமும் அமைந்து ஒவ்வொரு சத்தத்தையும் கேட்கும் திறன் கொண்டது.

நடுவில் ஸ்பீக்கர்...

நடுவில் ஸ்பீக்கர்...

நடுவில் அமைந்துள்ள ஸ்பீக்கர் உங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடும். அதுவும் அதிகபட்சமாக 120 டெசிபல் அளவுள்ள சத்தத்தை அதிகமாக வெளியிடும் திறன் கொண்டது.

5 ருசி...

5 ருசி...

இந்த படைப்பு 5 வேறுபட்ட ருசியை அறிய தக்கது. ஆனபோதும் தற்பொழுது ஒரு ருசி (பால்) மட்டும் அறிய தக்கதாக உள்ளது. இது மாற்றத்திற்கு உட்பட்டது.

பலமொழித் திறன்...

பலமொழித் திறன்...

பல மொழிகளை அறிந்து கொள்ளும் வகையில் இது படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதன் இருப்பிடம் முனிச், ஜெர்மனி என இவ்வாறு அவர் தனது இணையதளத்தில் தனது குழந்தை குறித்த தகவல்களை சுவாரஸ்யமாக வெளியிட்டுள்ளார்.

English summary
This is what we call a true fanboy. A former Apple employee Andreas Kleinke, who also appears to be a big fan of Apple's design, style, and presentation, has gone the Apple way in announcing the birth of his son, who is now a week-old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X