For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் முதியவர்களின் அவலநிலை..: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Google Oneindia Tamil News

ஜெனீவா: முதியோர் நலனை பராமரிக்கும் நாடுகள் குறித்து 91 நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வில் இந்தியா 73வது இடத்தைப் பிடித்துள்ளதாம்.

அக்டோபர் 1ம் தேதியான நேற்று உலக முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதியோர் நலனை சிறப்பாக பராமரிக்கும் நாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதில், இந்தியா 73வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ள பிற தகவல்களாவன...

91 நாடுகளில் ஆய்வு....

91 நாடுகளில் ஆய்வு....

முதியோரின் வருமானம், வாழ்க்கை சூழல், உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு அம்சங்கள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 'குளோபல் ஏஜ்வாட்ச் இண்டெக்ஸ் 2013'ன் என்ற பெயரில் 91 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.

முதலிடத்தில் ஸ்வீடன்....

முதலிடத்தில் ஸ்வீடன்....

இந்த ஆய்வின் முடிவுகளின்படி முதியோரின் நலனை சிறப்பாக பராமரிக்கும் நாடுகளில் ஸ்வீடன் சிறப்பிடம் பெற்றுள்ளது.

கடைசியில் ஆப்கானிஸ்தான்...

கடைசியில் ஆப்கானிஸ்தான்...

மேலும், மிகவும் மோசமான நாடு என்ற பட்டத்துடன் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.

கடைசிக்கு முந்தியில் பாகிஸ்தான்....

கடைசிக்கு முந்தியில் பாகிஸ்தான்....

இரண்டாம் இடத்தில் ஜெர்மனியும், ஆப்கானிஸ்தானுக்கு முந்தைய 2 இடங்களில் பாகிஸ்தானும், தான்சானியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது..

இலங்கைல பரவாயில்லை...

இலங்கைல பரவாயில்லை...

பொலிவியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் முதியோரின் நிலை சுமாராக உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது இந்த ஆய்வறிக்கை.

முதியோருக்கு முக்கியத்துவமில்லை....

முதியோருக்கு முக்கியத்துவமில்லை....

உலகின் பணக்கார நாடுகளான ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றில் முதியோருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஏழ்மை நிலையில் உள்ள தெற்காசிய நாடுகளில் அளிக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா 73வது இடம்....

இந்தியா 73வது இடம்....

இந்த ஆய்வறிக்கையின் படி, இந்தியா முதியோருக்கான பராமரிப்பில் 73ம் இடத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

வேலைக்கு செல்லும் முதியவர்கள்....

வேலைக்கு செல்லும் முதியவர்கள்....

மேலும், இந்தியாவில் 90% சதவீதத்திற்கும் அதிகமான முதியவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பேணுவதற்கு வேலைக்கு செல்வதாக அதிர்ச்சித் தகவல் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

English summary
India stands a dismal 73rd in the list of 91 countries, according to a UN-backed study on the wellbeing of the elderly in a rapidly ageing world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X