For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்: ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ப்ரமன்: இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான் என்று ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அதோடு மட்டுமல்லது விடுதலைப்புலிகள் இயக்கம், விடுதலைப் போராளி இயக்கம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக ஜெர்மனியின் ப்ரமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வில் கடந்த 7ஆம் தேதி முதல் விசாரணை நடந்து வந்தது. 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறிக்கொண்டு, லட்சக்கணக்கான தமிழர்களை குழந்தைகள், பெண்கள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் என அனைவரையும் படுகொலை செய்ததால், கொடுந்துயரத்துக்கு ஆளான ஈழத் தமிழர்கள், நேரடி சாட்சியங்களை பிரமாண வாக்குமூலங்கள் மூலம் மக்கள் தீர்ப்பாயத்தில் பதிவு செய்தனர்.

International tribunal in Germany to probe Sri Lanka’s genocide allegations

மே-17 இயக்கம்

தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன் காந்தியும், உமரும் இதுகுறித்த அறிக்கையை தீர்ப்பாயத்திடம் தந்தனர்.

இனக்கொலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக சட்ட வல்லுநர்கள், களப் பணியாளர்கள், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள் ஆகியோரின் கருத்துகளையும் தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

விடுதலைப்புலிகள்

இந்த விசாரணையின்போது விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா? என்ற கருத்து விவாதிக்கப்பட்டபோது, "இது மேல்நாட்டு அரசாங்கங்களால் தங்களுடைய அரசியல் பூகோள நலன்களுக்காக உரிமைக்குப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்" என்று மியான்மர் தேசத்தின் ஜனநாயகப் போராளி மவுங் ஜார்னி தெரிவித்தார்.

இனப்படுகொலையே!

மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், நான்காம் நாளான டிசம்பர் 10 ஆம் தேதி மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

அதில், ஈழத் தமிழர்களை தனித் தனியாக கொலை செய்யாமல், தமிழர் இனம் என்ற அடிப்படையில் அந்த சமூகத்தின் அடையாளமே இல்லாமல் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அரசு படுகொலையை நடத்தியுள்ளது.

தமிழ் இனம் அழிப்பு

புலிகளோடு சிங்கள அரசு நடத்திய யுத்தத்துக்கு முன்பாகவே, நீண்ட காலமாக தமிழ் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தி வந்துள்ளது. யுத்தத்துக்குப் பின்னரும் தமிழ் இன அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

இங்கிலாந்து ஆயுத உதவி

உலக நாடுகளின் உதவி இல்லாமல், இந்த இனப்படுகொலை யுத்தத்தை இலங்கை அரசு செய்திருக்க முடியாது. இலங்கை அரசுக்கு, இங்கிலாந்து அரசு ஆயுத உதவி செய்ததோடு, இனக்கொலை நடத்திய சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

அமெரிக்காவும் உதவி

தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை அரசு இனக்கொலை நடத்துவதற்கான ராணுவ பலத்தை கொடுக்கும் விதத்தில், அமெரிக்க அரசு ராணுவ உதவி செய்திருக்கிறது. அமைதிக்கான பேச்சு வார்த்தை நடவடிக்கைகளின்போது அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டதால், 2009 இல் தமிழர்களின் பேரழிவுக்கு அது வழி வகுத்தது.

போராளிகளா? பயங்கரவாதிகளா?

மியான்மர் தேசத்தின் ஜனநாயகப் போராளி மவுங் ஜார்னி விசாரணையின்போது எடுத்துரைத்த கருத்தை பார்த்தால் நெல்சன் மண்டேலாவும் ஒரு காலத்தில் பயங்கரவாதிதான். ஆனால், அவர் விடுதலைப் போராளி என்று உலகம் போற்றுகிறது. அவர் விடுதலைப் போராளி என்றால், விடுதலைப்புலிகள் இயக்கமும் விடுதலைப் போராளி இயக்கம்தான்" என்று தீர்ப்பளித்துள்ளது.

ஐ.நாவும் குற்றவாளிகளா?

மேலும், தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரான டென்னிஸ் ஹாலிடே, "ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர் படுகொலையை தடுக்கத் தவறியதோடு, அப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்டு தன் கடமையில் தவறியது என்றும், சர்வதேச சமுதாயமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது" என்றும் நீதிபதி குற்றம் சாட்டினார்.

இந்தத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கு குறித்து வலுவான சாட்சியங்களையும் ஆவண ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின், அதனைக் குறித்து முடிவை தீர்ப்பாயம் தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
ecretary General of the PPT Gianni Tognoni in a statement said that the PPT’s eminent panel of judges will “hear accusations of genocide against the Sri Lankan State and charges of complicity with this crime against several other countries”.This is the second such high-profile session to be conducted by the PPT on Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X