For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேல் ஒரு 'வெறி நாய்' 'கொடூர ஓநாய்': ஈரான் மத தலைவர் அயத்துல்லா கொமேனி சாடல்!

By Mathi
Google Oneindia Tamil News

தெஹ்ரான்: காஸாவில் அப்பட்டமான இனப்படுகொலையை நிகழ்த்தி ஒரு வெறிபிடித்த நாயைப் போலவும் கொடூர ஓநாயைப் போலவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்று ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி சாடியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 20 நாட்களாக கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இனப்படுகொலை குறித்து ரமலான் நிகழ்வில் கலந்து கொண்ட ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா கொமேனி பேசியதாவது:

Iran's Khamenei calls Israel 'rabid dog', urges arms for Palestinians
  • அனைத்து இஸ்லாமியர்களும் இஸ்ரேலியர்களின் இன அழிப்புப் போராட்டத்துக்கு எதிராக பாலஸ்தீனத்துடன் கைகோர்க்க வேண்டும்.
  • ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் பாலஸ்தீனத்தின் ராணுவ பலத்தை குறைப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன.
  • இஸ்ரேலின் "ஜியோனிச அரசை" எதிர்த்து போராடும் பாலஸ்தீனத்துக்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஆயுதங்களை வழங்க வேண்டும்.
  • இஸ்ரேல் ஒரு வெறிநாயைப் போலவும் கொடூர ஓநாயைப் போல நடந்து கொள்கிறது. இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்து வருகிறது.
  • காஸாவில் மிகச்சிறிய இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவும் நீரும் மின்சாரமும் இல்லாமல் ஆயுதமேந்திய எதிரியை எதிர்கொண்டு இருக்கின்றனர்.
  • அப்பாவிகளை இத்தகைய கொடூர நிலைக்குத் தள்ளிய அனைவருக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
English summary
Iran's supreme leader Ayatollah Ali Khamenei accused Israel's leaders of committing "genocide" in Gaza and called on the Islamic world to arm Palestinians fighting "the Zionist regime".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X