For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய 'இஸ்லாமிய தேச'த்தில் முஸ்லிம்கள் குடியேற ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அல் பாக்தாதி அழைப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

மொசூல்: சிரியா- ஈராக் நகரங்களை இணைத்து தாங்கள் உருவாகியிருக்கும் புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் வந்து குடியேற வேண்டும் என்று அதன் கலீபாவாகிய அபு பக்ர் அல் பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன் இந்த நகரங்களை ஒருங்கிணைத்து புதிய இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இதன் கலீபாவாக (தலைவராக) அபு பக்ர் அல் பாக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ISIS leader calls for Muslims to help build Islamic state in Iraq

இந்த நிலையில் அபு பக்ர் அல் பாக்தாதி வெளியிட்டுள்ள ஆடியோ செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் எங்கும் வாழும் முஸ்லிம்கள் ஈராக் மற்றும் சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த வேண்டும்.

இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது என்பது முஸ்லிம்களின் "கடமை". நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய தேசத்துக்கு வரவேண்டும்.

சிரியா , சிரியர்களுக்கு மட்டுமானதல்ல, ஈராக், ஈராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல, முஸ்லிம் மக்களே உங்கள் நாட்டுக்கு விரைந்து வாருங்கள்.

அல்லா காட்டிய வழியில் நமது புனிதப் போரை நடத்துவதைத் தவிர இந்த புனிதமான ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய புனிதமான பணி வேறு எதுவுமே இருக்கமுடியாது, எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உங்கள் தூய்மையான முன்னோர்களின் வழியில் செல்லுங்கள்

இவ்வாறு அல் பக்பாக்தாதி தமது ஆடியோ செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

English summary
The leader of the extremist group that seized much of northern Iraq and Syria called on Muslims worldwide on Tuesday to join the battle and help build an Islamic state in the newly conquered territory. The 19-minute audiotape from Abu Bakr al-Baghdadi came two days after his organization, the Islamic State of Iraq and the Levant, unilaterally declared the establishment of an Islamic state, or caliphate, in the land it controls. It also proclaimed al-Baghdadi the caliph, and demanded that all Muslims around the world pledge allegiance to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X