For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்ப ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்

By Siva
Google Oneindia Tamil News

பாக்தாத்: அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்ப ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஈராக்கில் அட்டகாசம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. விரைவில் தரை வழித் தாங்குதலை துவங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரை அழிக்கப் போவதாக வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே தீவிரவாதிகளின் ஃபோரமில் ஒரு தீவிரவாதி புதிய திட்டம் ஒன்றை வகுத்து அது குறித்து எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு,

எபோலா

எபோலா

அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்பினால் எப்படி இருக்கும் என்ற தலைப்பில் அந்த தீவிரவாதி எழுதியதில் பல ஐடியாக்களை தெரிவித்துள்ளார்.

பெப்சி

பெப்சி

ஒரு பெப்சி பாட்டிலில் எபோலா வைரஸை கலந்து அதை ஒரு பையில் வைத்து அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள நீர் நிலைகளில் கலந்து விட வேண்டும் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அவர்களை எபோலா தாக்கியதும் அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு வைரஸை பரப்பச் சொல்ல வேண்டும் என்பது அந்த நபரின் பரிந்துரைகளில் ஒன்று.

கடிதம்

கடிதம்

ஆன்த்ராக்ஸ் போன்று எபோலா வைரஸை கடிதம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த தீவிரவாதி தெரிவித்துள்ளார்.

முடியாது

முடியாது

எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை, எச்சில் உள்ளிட்டவை மூலம் தான் வைரஸ் பரவுமே தவிர அதை பாட்டிலில் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கலந்தால் பரவாது என்று மருத்துவ நிபுணர் வில்லிம் ஷாப்னர் தெரிவித்துள்ளார்.

வைரஸ்

வைரஸ்

ஆன்த்ராக்ஸ் என்பது பாக்டீரியா. அதை பவுடர் மூலமாக பரப்ப முடியும். ஆனால் எபோலா மனித அல்லது விலங்குகளின் உடலுக்கு வெளியே உயிருடன் இருக்காது. அதனால் அதை கடிதம் மூலம் அனுப்பினால் அது உயிருடன் இருக்காது என்று ஷாப்னர் தெரிவித்துள்ளார்.

English summary
ISIS terrorists are reportedly planning to infect the US with deadly ebola virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X