For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ வீரரை சிறைப் பிடித்தது ஹமாஸ் - இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு - 40 பாலஸ்தீனியர்கள் பலி

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது. அவரை மீட்கும் முயற்சிகளில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் முயற்சியால் அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தமும் முறிந்து போனது. ஹமாஸ் நிலைகளைக் குறி வைத்து கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த அதிரடித் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Israeli army fears soldier captured in Gaza

காஸா முனையின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வீரர் ஒருவரை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரைத் தேடும் பணியில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகியுள்ளது.

போர் நிறுத்தம் முறிந்தது

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஐநா முயற்சியால் அமல்படுத்தப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தம் முறிந்துள்ளது. பாலஸ்தீன நிலைகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஹமாஸைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஆனால் செத்து விழுவது என்னவோ அப்பாவி பாலஸ்தீனியக் குழந்தைகளும், பிறரும்தான்.

English summary
Israeli forces in the southern Gaza Strip are searching for a missing soldier they fear may have been captured by militants during clashes on Friday, the army said. "Initial indications suggest that a soldier has been abducted by terrorists," a statement said. "The Israel defence forces are currently conducting intelligence efforts and extensive searches in order to locate the missing soldier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X