For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கள் நாட்டு ராணுவத்தினரை உற்சாகப்படுத்த ஆடை அவிழ்த்த இஸ்ரேல் பெண்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல் அவிவ்: உலகின் எந்த ஒரு நாட்டு பாதுகாப்பு படையும் எதிர்கொள்ளாத விமர்சனத்தை இஸ்ரேல் ராணுவம் சந்தித்துக்கொண்டுள்ள நிலையில், மற்றொரு பக்கம், வேறு எங்கும் கிடைக்காத கன்னிப்பெண்களின் ஆதரவும் இஸ்ரேல் ராணுவத்துக்கு கிடைத்து வருகிறது. அதுவும், ஆடையை அவிழ்த்துப்போடும் அழவுக்கு ஆதரவு சென்றுள்ளது.

உலக நாடுகள் கண்டனம்

உலக நாடுகள் கண்டனம்

காசா முனையில் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக கூறி அதிபயங்கர ஆயுதங்களுடன் அடுத்தடுத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தின் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

தேவதூதர்களாக பார்க்கும் இஸ்ரேலியர்கள்

தேவதூதர்களாக பார்க்கும் இஸ்ரேலியர்கள்

ஆனால் இஸ்ரேல் நாட்டு மக்களோ, தங்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் தேவதூதர்களாக இஸ்ரேல் பாதுகாப்பு படையை (IDF) பார்க்கிறார்கள். அந்த நாட்டு மக்கள் இஸ்ரேல், ராணுவம் தாக்குதல் நடத்தும் இடத்துக்கு சென்று குடும்பத்தோடு ராணுவத்தினரை உற்சாகப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் பக்கம் உருவாக்கம்

பேஸ்புக் பக்கம் உருவாக்கம்

இந்நிலையில் இஸ்ரேல் இளம் பெண்கள் பலர் ஒன்றிணைந்து, "Standing with IDF" என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர். இதில் தங்கள் நாட்டு ராணுவத்தினரை ஊக்கப்படுத்தியும், ஹமாஸ் தீவிரவாதிகளை திட்டியும் பதிவிட்டு வருகிறார்கள்.

உடலில் தேச பக்தி

உடலில் தேச பக்தி

இத்தோடு நிறுத்தவில்லை இஸ்ரேல் பெண்கள். ஆடையை குறைத்துவிட்டு அரை நிர்வாண நிலையில் தங்கள் உடலில் 'I love IDF' என்பது போன்ற வாசகங்களை லிப்ஸ்டிக் உள்ளிட்டவற்றால் எழுதி போட்டோ எடுத்து அதையும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தினர் இந்த பெண்களின் செயலை பார்த்து ஊக்கம் பெற்று மேலும் தாக்குதலை தீவிரப்படுத்துவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.

ஆதரவு மழை

ஆதரவு மழை

கடந்த வியாழக்கிழமை துவக்கப்பட்ட இந்த பேஸ்புக் பக்கத்துக்கு அதற்குள்ளாக பல ஆயிரம் லைக்குகள் விழுந்துள்ளன. பாலஸ்தீனத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் எதிரான கருத்துக்களை இஸ்ரேல் ஆதரவாளர்கள் மளமளவென பதிவிட்டு வருகிறார்கள்.

English summary
The young women from Israel have been encouraging their soldiers by taking off their clothes and taking semi-naked pictures and posting them to the Facebook page "Standing with IDF".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X