For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூயார்க்கில் மோடி பேச்சின்போது பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தாக்கப்பட்டார்!

Google Oneindia Tamil News

Journalist Rajdeep Sardesai Assaulted in New York
நியூயார்க்: நியூயார்க் மேடிசன் ஸ்கொயர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தின்போது மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயை ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட் செய்திச் சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கிறார் ராஜ்தீப். மூத்த பத்திரிகையாளர். இவர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண செய்தி சேகரிப்புக்காக அங்கு போயுள்ளார்.

நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடந்த மோடி பேச்சை கவர் செய்வதற்காக அங்கு சென்றிருந்தபோது, திடீரென மோடி ஆதரவுக் கும்பல் ஒன்று ராஜ்தீப்பை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கியது.

ராஜ்தீப், மோடி ஆதரவாளர்களை சந்தித்து பேட்டி எடுத்துக்கொண்டிருந்த போது திடீரென தாக்கப்பட்டார். அவரை கேலி செய்த மோடி ஆதரவாளர்கள் அவரை கீழேயும் தள்ளி விட்டுள்ளனர் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜ்தீப் விடுத்துள்ள டிவிட் செய்தியில், நல்லவேளை என்னைத் தாக்கியவர்களை நாங்கள் கேமராவில் படம் பிடிக்க முடிந்தது. இப்படிப்பட்டவர்களை வெட்கப்பட வைக்க அவர்களது முகத்தை அம்பலப்படுத்துவதுதான் என்று கூறியுள்ளார்.

English summary
Senior journalist Rajdeep Sardesai was first heckled and then pushed today near Madison Square Garden by a group gathered to support Prime Minister Narendra Modi, before the leader arrived at the venue to address Indian Americans. Mr Sardesai tweeted, "Glad we caught the idiots on cam. Only way to shame the mob is to show them."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X