For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீச் ஹவுஸை பார்த்திருப்பீங்க, கிளிஃப் ஹவுஸை பார்த்திருக்கீங்களா?

By Siva
Google Oneindia Tamil News

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் உள்ள குன்றின் ஓரத்தில் கான்செப்ட் வீடு ஒன்றை அந்நாட்டைச் சேர்ந்த மாட்ஸ்கேப் நிறுவனம் கட்டியுள்ளது.

மலை உச்சி மீது வீடு இருந்தாலே பலர் குஷியாகிவிடுவார்கள். இந்நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனமான மாட்ஸ்கேப் கிளிஃப் ஹவுஸ் என்ற வீட்டை குன்றின் ஓரத்தில் கட்டியுள்ளது.

இந்த வீடு ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்டுள்ளது.

கிளிஃப்

கிளிஃப்

குன்றின் ஓரத்தில் நின்று கடலில் எட்டிப் பார்த்தாலே கிறுகிறுக்கும். அப்படி இருக்கையில் மாட்ஸ்கேப் ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள குன்றின் ஓரத்தில் கான்செப்ட் வீடு ஒன்றை கட்டியுள்ளது.

5 அடுக்குமாடி

5 அடுக்குமாடி

குன்றின் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடு 5 மாடிகள் கொண்டது. வீட்டுக்குள் கார் பார்க்கிங்கில் இருந்து லிப்ட் மூலம் தான் செல்ல முடியும்.

தரைதளம்

தரைதளம்

தரைதளத்திற்கு சென்றால் வீடு ஏதோ இந்திய பெருங்கடலில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஏனென்றால் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக இந்திய பெருங்கடலில் அலைகள் ஆர்ப்பரிப்பதை பார்க்க முடிகிறது. வீட்டில் கராஜ், 3 படுக்கையறைகள், ஸ்பா, சமையல் அறை, சாப்பிடும் இடம், பார்பிக்யூ பகுதி உள்ளிட்டவை உள்ளன.

தம்பதி

தம்பதி

தம்பதி ஒன்று மாட்ஸ்கேப்பை அணுகி தங்களுக்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் உள்ள இடத்தில் வீடு கட்டுமாறு கேட்டதையடுத்து இது கட்டப்பட்டுள்ளது.

Photos: modscape

English summary
Australian prefab architecture specialists Modscape has come up with a concept house in a cliff side in the Australian southwest coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X