For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூண்டு கோழி முட்டைகளை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்த மாட்டோம்: மெக் டொனால்ட் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

கான்பெரா: கூண்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் கோழிகளின் முட்டைகளை தங்கள் உற்பத்தி பண்டங்களில் பயன்படுத்தப்போவதில்லை என்று ஆஸ்திரேலியாவில் மெக் டொனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகமெங்கும் சங்கிலி தொடர் உணவக கடைகளை நடத்தி வரும் மெக் டொனால்டுக்கு ஆஸ்திரேலியாவிலும் அதிக உணவகங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவிலுள்ள விலங்கு ஆர்வலர்கள், கூண்டுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் கோழி வளர்ப்பு முறைக்கு எதிராக அன்த நாட்டில் போராட்டங்கலை நடத்தி வருகின்றனர்.

கோழிகளுக்கு சுதந்திரம் தேவை

கோழிகளுக்கு சுதந்திரம் தேவை

கோழிகள் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட கூடாது, கோழிகள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பது விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மெக் டொனால்டு மீது கோபம்

மெக் டொனால்டு மீது கோபம்

போராட்டத்தின் ஒரு பகுதியாக கூண்டில் அடைக்கபப்படும் கோழிகளில் இருந்து பெறப்படும் முட்டைகளை பயன்படுத்தும் மெக் டொனால்ட் நிறுவனத்தின் மீதும் அவர்களின் கோபப்பார்வை திரும்பியது.

பணிந்தது மெக் டொனால்டு

பணிந்தது மெக் டொனால்டு

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், படிப்படியாக இதுபோன்ற கோழிகளில் இருந்து பெறப்படும் முட்டைகளின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள போவதாக மெக் டொனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

3 ஆண்டுகள் கெடு

3 ஆண்டுகள் கெடு

இன்னும் மூன்றாண்டுகளில், அதாவது 2017ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவிலுள்ள மெக் டொனால்ட் உணவகங்களில் கூண்டில் அடைத்து வைக்கப்படும் கோழிகளின் முட்டை பயன்பாட்டை தவிர்த்துவிடுவதாக மெக்டொனால்ட் அறிவித்துள்ளது.

அறிவிப்புக்கு வரவேற்பு

அறிவிப்புக்கு வரவேற்பு

இந்த அறிவிப்பை 'அனிமல் ஆஸ்திரேலியா' அமைப்பு வரவேற்றுள்ளது. பிற உணவகங்களும் இதே போன்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஆண்டுக்கு 9 கோடி முட்டைகள்

ஆண்டுக்கு 9 கோடி முட்டைகள்

ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 91 மில்லியன் முட்டைகளை பயன்படுத்துகிறது மெக் டொனால்ட். ஏற்கனவே மெக் டொனால்ட் ஐரோப்பாவில் கூண்டு கோழி முட்டைகளை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Fast-food giant McDonald's has decided to phase out caged eggs from its menu in Australia within three years, following sustained pressure from animal rights activists, media reported Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X