For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஸ்கோவில் 'பீக் அவரில்' பாதாள மெட்ரோ ரயில் தடம்புரண்டு விபத்து: 20 பேர் பலி, 150 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் மெட்ரோல் ரயில் தடம் புரண்டதில் 20 பேர் பலியாகினர், 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அர்பாட்ஸ்கோ-போக்ரோவ்ஸ்கியா வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை காலை சென்ற மெட்ரோ ரயில் தடம் புரண்டது.

இந்த விபத்தில் 3 பேர் பலியானதாகவும், 30 பேர் காயம் அடைந்ததாகவும் முதலில் கூறப்பட்டது.

பலி

பலி

மெட்ரோ ரயில் விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

50 பேர்

50 பேர்

காயம் அடைந்தவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பாதாள மெட்ரோ

பாதாள மெட்ரோ

அர்பாட்ஸ்கோ-போக்ரோவ்ஸ்கியா இடையே 28 மைல் தூர வழித்தடம் தான் மாஸ்கோவின் மிக நீளமான வழித்தடம் ஆகும். மேலும் மாஸ்கோவுக்கு செல்ல அமைக்கப்பட்ட இரண்டாவது பாதாள மெட்ரோ வழித்தடம் இது தான்.

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

மாஸ்கோவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் அரசு போக்குவரத்துகள் கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விபத்துக்கு தீவிரவாதிகள் காரணம் அல்ல என்று கூறப்படுகிறது.

2 பேர் கைது

2 பேர் கைது

இந்த விபத்து தொடர்பாக மெயின்டனென்ஸ் போர்மேன் வாலரி பாஸ்கடோவ் மற்றும் அவரது உதவியாளரான யூரி கோர்டோவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
Atleast 20 were killed and more than 150 persons got injured after an underground metro train derailed in Moscow on tuesday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X