For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனப்படுகொலைக்கு எதிரான புதிய ஆயுதம்..இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்கும் பாலஸ்தீனர்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

காஸா: இனப்படுகொலையை நிகழ்த்திய இஸ்ரேல் தயாரிப்பு பொருட்கள் எதனையும் வாங்குவதில்லை என்ற புதிய ஆயுதத்தை ஏந்தி இருக்கின்றனர் பாலஸ்தீனர்கள்.

காஸாவை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் ஒரு மாத காலம் இடைவிடாத போரை நடத்தியது. பச்சிளம் குழந்தைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது.

எகிப்து, அமெரிக்கா ஆகியவற்றின் முன்முயற்சியில் அவ்வப்போது யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தயாரிப்பு பொருட்கள் எதனையும் வாங்கமாட்டோம் என்பதை உறுதியுடன் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

ரமல்லாவை சேர்ந்த சலா முசா என்பவர் கூறுகையில், காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் தயாரிப்பு பொருட்கள் எதனையு வாங்கப் போவதில்லை என்கிறார்.

இப்படி, இனப்படுகொலை நிகழ்த்தியவர்களுக்கு பாடம்புகட்ட புதிய ஆயுதமாக ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களுமே 'இஸ்ரேல் தயாரிப்பு பொருட்களை' புறக்கணிக்க முடிவு செய்திருப்பது பாலஸ்தீன வரலாற்றில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

English summary
In Gaza, Israelis and Palestinians are battling it out with rockets and air strikes. But in Israel and the West Bank, the two sides have found a new weapon: boycotting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X