For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு: தனி நாடாக 45% பேர் மட்டுமே ஆதரவு- பிரிட்டனின் அங்கமாகவே நீடிக்கும்!!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிவது தொடர்பான வாக்கெடுப்பில் தனிநாடாக 45% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் இருந்து பிரிய வேண்டாம் என்று 55% பேர் தெரிவித்துள்ளனர். இதனால் பிரிட்டனின் ஒரு அங்கமாகவே ஸ்காட்லாந்து நீடிக்கும்.

பிரிட்டனில் ஸ்காட்லாந்து

பிரிட்டனில் ஸ்காட்லாந்து

கடந்த 1707-ம் ஆண்டு இணைந்தது. 307 ஆண்டுகள் இணைந்து இருந்த நிலையில், பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடு ஆக வேண்டும் என்று அதன் முதல்வர் அலெக்ஸ் சால்மண்ட் தலைமையில் ஒரு அணி வலியுறுத்தியது.

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி நாடு ஆவதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

நிறைவடைந்தது

நிறைவடைந்தது

அந்த கருத்து வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் நேற்று காலை இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு அடைந்ததது.

32 கவுன்சில்களில்..

32 கவுன்சில்களில்..

மொத்தம் 32 கவுன்சில்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

பிரிய வேண்டாம்

பிரிய வேண்டாம்

வாக்கெடுப்பின் முடிவில் இறுதியாக பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டாம் என்பதற்கு 55% பேர் வாக்களித்திருக்கின்றனர். பிரிந்து தனிநாடாக வேண்டும் என்று 45% பேர் வாக்களித்துள்ளனர்.

மகாராணி அறிக்கை

மகாராணி அறிக்கை

இதனைத் தொடர்ந்து பிரிட்டன் மகாராணி முறைப்படியான அறிக்கை ஒன்றை வெளியிடுவார்.

English summary
Those who favour staying with the UK are ahead in the vote count in Scotland's independence referendum, opening up a steady lead over the Yes campaingers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X