For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பலான' விஷயங்களை தேடுவதற்காக பிரத்யேக சர்ச் இன்ஜின்! கூகுள் மாஜி ஊழியர்கள் உருவாக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முழுக்க முழுக்க பலான விஷயங்களை தேடுவதற்கென்றே புதிய தேடுபொறி (search engine) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கூகுள், பிங்க் போன்றவை தற்போது அதிகப்படியான பயனாளர்கள் பயன்படுத்தும் தேடுபொறியாக உள்ளது. ஆபாச படங்கள், வீடியோக்கள் மற்றும் கதைகளை தேடுவதற்கு, இவ்விரு தேடு பொறிகளுமே பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் ஆபாச பிரியர்கள் மனம் வெறுத்து போயிருந்த நிலையில், பலான விஷயங்களை தேடுவதற்காக தனி பொறியை உருவாக்கியுள்ளனர் அமெரிக்க ஆய்வு குழுவினர்.

கூகுளின் முன்னாள் ஊழியர்கள்

கூகுளின் முன்னாள் ஊழியர்கள்

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் ஒன்றிணைந்து சுமார் ஓராண்டு காலம் தொடர்ந்து முயற்சி செய்து ஆபாச படம், வீடியோ, கதைகளை ஒருங்கிணைக்கும் தேடுபொறியை உருவாக்கியுள்ளனர்.

பயங்கர வரவேற்பாம்

பயங்கர வரவேற்பாம்

இந்த தேடுபொறியின் பெயர் Boodigo ஆகும். இதன் நிறுவனர்களில் ஒருவரான கோலின் ரவுன்ட்ரி அளித்த பேட்டியில் "செப்டம்பர் 15ம்தேதி முதல் பூடிகோ தேடுபொறி தனது செயல்பாட்டை ஆரம்பித்துவிட்டது. ஆனால் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார்.

கூகுள் வேஸ்டுங்க

கூகுள் வேஸ்டுங்க

மேலும் அவர் கூறுகையில் "கூகுளும், பிங்கும் வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களை குறைத்துக் கொண்டே வர ஆரம்பித்துள்ளன. இதுபோன்ற செயல்பாடு என்னைப்போன்ற ஆபாச பிரியர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆபாசம் சார்ந்த உள்ளடக்கங்களை தேடினால், கூகுள் ஏதோ விகிபீடியாவில் உள்ள அறிவுரைகளை காண்பிக்கிறது. இதுபோன்ற இடையூறுகளை தவிர்த்து முழுக்க காமம் சார்ந்த உள்ளடக்கங்களை காண்பிப்பதே பூடிகோவின் பணி" என்றார் அவர்.

இணையத்துக்கு வருவதே இதற்குத்தானே..

இணையத்துக்கு வருவதே இதற்குத்தானே..

ஆபாசத்தை விரும்பவில்லை அல்லது அதுதான் சமூகத்தை கெடுக்கிறது என்று என்னதான் சிலர் முழங்கினாலும்கூட, இணையத்தில் ஆபாசம் குறித்து தேடுவோர்தான் அதிகம் என்கிறது கூகுளின் புள்ளி விவரம். 'porn' தொடர்பான உள்ளடக்கங்களை இணையத்தில் தேடுவோர் 80 சதவீதத்திற்கும் மேல் என்று கூகுள் 2010 முதல் தொடர்ந்து கூறி வருகிறது.

தகவல்களை சேமிப்பது கிடையாது

தகவல்களை சேமிப்பது கிடையாது

பூடிகோ தேடுபொறி இருவகையான வேலைகளை செய்கிறது. கீ வார்த்தைகளை கொண்டு பயனர்கள் தேடும் வெப்சைட்டுக்கு அழைத்துச் செல்லும் வேலையோடு நிற்காமல், அந்த வெப்சைட் உண்மையானதுதானா என்பதையும் கண்டறிந்த பிறகே காண்பிக்கிறது. கூகுள் மற்றும் பிங்க் தேடு பொறிகளைப்போல, பயனாளர்கள் குறித்த விவரத்தை பூடிகோ சேமிப்பது கிடையாது என்பதும் இந்த தேடுபொறிக்கு கிடைத்துள்ள மவுசுக்கு ஒரு காரணம் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

English summary
It's not every day that a new search engine takes its place on the Internet, much less one specialising in pornography as is the case with Boodigo, a tool developed by former Google employees who plan to make it the portal for the adult entertainment industry on the Web.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X