For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க தேசியக் கழக உறுப்பினராக தமிழக விஞ்ஞானி – ஒபாமா நியமனம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க வாழ் தமிழரான விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதனை, அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஒபாமா நியமனம் செய்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. சேதுராமன், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

Obama names IIT alumnus Dr Sethuraman Panchanathan to Science Foundation board

மேலும், பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் பொறியியலில் இளநிலை பட்டமும், ஐ.ஐ.டி.யில் உயர்நிலை பட்டமும் பெற்றுள்ளார்.

கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். மேலும் 400க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

English summary
US President Barack Obama plans to appoint a Madras University graduate and alum of the Indian Institute of Technology as a member of the National Science Board of National Science Foundation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X