For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனாமி வதந்தியால் பீதி.. பிலிப்பைன்ஸில் நெரிசலில் சிக்கி பெண் பலி

Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்ஸில் விடுக்கப்பட்ட தவறான சுனாமி எச்சரிக்கைத் தகவலால் பீதியடைந்த நூற்றுக்கணக்கானோர் பயந்து ஓடியபோது நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

மணிலாவின் தெற்கில் உள்ள கான்டெலரியா என்ற ஊரில்தான் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. இந்த நகரில் சுனாமி தாக்கப் போவதாக தகவல்கள் பரவியது. இதனால் பீதியடைந்த நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். அப்போது நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

ஆனால் தாங்கள் சுனாமி எச்சரிக்கை எதையும் பிறப்பிக்கவில்லை என்று வட்டார இயற்கைப் பேரிடர் கவுன்சிலின் தலைவர் ஹென்றி பஸர் கூறியுள்ளார்.

நெரிசலில் சிக்கி உயிரிழந்தது 63 வயதான பெண் என்று தெரிகிறது. இவர் ஒரு மோட்டார் டிரை சைக்கிளில் சிக்கி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

பிலிப்பைன்ஸில் மட்மோ புயலால் கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் சிலர் சுனாமி வதந்தியை கிளப்பி விட்டு
விட்டனர்

பிலிப்பைன்ஸில் புயல்களும், நிலநடுக்கவும் மிகவும் சாதாரணமானது என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு அங்கு குறைந்தது 20 புயல்கள் தாக்கும்.

சமீபத்தில்தா் ரம்மசன் என்ற புயல் பிலிப்பைன்ஸைத் தாக்கியது. இதில் 98 பேர் உயிரிழந்தனர்.

English summary
A false tsunami alarm has left one person dead and prompted hundreds of others to flee their homes in the Philippines, where natural disasters are frequent, a civil defence official says. The cause of the sudden panic that hit Candelaria 88 kilometres south of Manila and other impoverished towns is still being investigated, said Henry Buzar, head of the area's disaster management council. A 63-year-old woman who was fleeing on a motorised tricycle had a heart attack and died, Mr Buzar said, citing a local hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X