For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுற்றுச்சூழல் மாசு... காற்றில் பரவும் நோய்கள்: விரைவில் வருகிறது ஆக்சிஜன் ஊசிகள் !

Google Oneindia Tamil News

லண்டன்: அதிகரிக்கும் வாகனங்களாலும், மரங்கள் வெட்டப்படுவதாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப் படுவது மனிதர்கள் தான்.

காற்றின் மூலம் பரவும் நோய்களால் மனித ஆரோக்கியம் சீர் குலைகிறது. சிலர் மட்டும் மாஸ்க்குகள் அணிந்து தங்களைக் காத்துக் கொண்டாலும், அது பெரும்பாலான சமயங்களில் சாத்தியப் படுவதில்லை.

அதிலும் வளர்ந்த, வளரும் நாடுகளில் காற்றின் மூலம் ஏராளமான நோய்கள் பரவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். மாசில்லாத சுத்தமான காற்றுக்கு மக்கள் ஏங்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனால், விரைவில் தூய ஆக்சிஜன் ஊசிகள் நடைமுறைக்கு வரலாம் என நம்பிக்கைத் தெரிவித்துள்னர் ஆராய்ச்சியாளர்கள்.

நோய்த்தடுப்பு ஊசிகள்...

நோய்த்தடுப்பு ஊசிகள்...

தற்காப்பு மருந்து மாதிரி எதிர்காலத்தில், நாம் வெளியே செல்லும்போது, நம்மை காற்றில் பரவும் நோய்களிடம் இருந்து பாதுகாக்க இத்தகைய ஆக்சிஜன் ஊசிகள் பயன் பாட்டிற்கு வரலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இவர்கள்.

நோயாளிகளுக்கு...

நோயாளிகளுக்கு...

மேலும், இந்த ஊசிகள், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் உறுப்புகளுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் எனவும், அவர்களின் உயிர் காக்க உதவும் எனவும் கூறப்படுகிறது.

வழிமுறைகள்...

வழிமுறைகள்...

இவற்றை நரம்புகளின் வழியாக போடுவதற்கான வழிமுறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பரிசோதனை...

பரிசோதனை...

முதல்கட்டமாக இந்த ஊசிகள் முயல்களுக்கு போட்டு பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Drug injections are fine but oxygen injections? As the air pollution keeps getting worse, this is the future to protect yourself from airborne diseases. Scientists are now developing ways to administer oxygen intravenously through gas-filled microparticles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X