For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. புதிய தலைவராக ரிஸ்வான் அக்தார் நியமனம்!

By Mathi
Google Oneindia Tamil News

Pakistan appoints army chief's ally Rizwan Akhtar as ISI chief
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு அமைபப்பான ஐ.எஸ்.ஐ.-ன் புதிய தலைவராக லெப். ஜெனரல் ரிஸ்வான் அக்தார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துக்கு அடுத்ததாக சக்தி வாய்ந்த அமைப்பாக திகழ்வது இன்டர் சர்வீசஸ் இன்டலிஜன்ஸ் எனப்படும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பாகும். உள்நாட்டு அரசியல், தீவிரவாதம், வெளிநாடு அரசுகளின் செயல்பாடுகள் போன்றவற்றை உளவு பார்த்து பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிப்பது இதன் முக்கிய பணியாகும்.

ஐ.எஸ்.ஐ. அமைப்பு பாகிஸ்தான் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும், அது ராணுவத் தளபதியின் ஆணைக்கு இணங்கவே செயல்படும் என்பது வெளிப்படையான உண்மை.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதன் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ஷகிருல் இஸ்லாம் இருந்து வருகிறார். இவர் விரைவில் ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ. அமைப்பின் புதிய தலைவராக சிந்து மாகாணத்தின் துணைராணுவ படையின் தலைவராக உள்ள ரிஸ்வான் அக்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரிஸ்வாக் அக்தர், தற்போதைய ராணுவ தளபதி ரகீல் சரீப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

English summary
Lt Gen Rizwan Akhtar, considered a close confidante of army chief Gen Raheel Sharif, was today appointed as new head of Pakistan's powerful spy agency ISI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X