For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக். மருத்துவர் அப்ரடி மீது புதிய கொலை வழக்கு

By Mathi
Google Oneindia Tamil News

பெஷாவர்: அல்கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவர் அப்ரடி மீது பாகிஸ்தான் அரசு புதிய கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் அபோதாபாத்தில் ஒரு பங்களாவில் தங்கியிருந்த அல்கொய்தா இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க சிறப்புபடையால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்லேடன் அங்கு பதுங்கி இருக்கும் விவரத்தை பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஷகீல் அப்ரடி என்பவரே அமெரிக்காவுக்கு தெரிவித்தார்.

Bin laden

இதையொட்டி தொடரப்பட்ட வழக்கில் அப்ரடிக்கு 33 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரை விடுவிக்க அமெரிக்கா வலியுறுத்தியது. பின்னர் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ததில் தண்டனை விதித்தது செல்லாது என கூறப்பட்டது. எனவே அப்ரடி விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கைபர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், டாக்டர் அப்ரடி மீது புதிய கொலை வழக்கு ஒன்றை போலீசார் பதிவு செய்துள்ளனர். அப் புகாரில் கடந்த 2006-ம் ஆண்டில் தனது மகனுக்கு ஆபரேசன் நடத்திய போது அவனை அப்ரடி கொன்று விட்டார் என பெண் கூறியுள்ளார்.

இதனால் அப்ரடி விடுதலை ஆவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary
A Pakistani doctor who helped the CIA find Osama bin Laden has been charged with murder over a 2006 surgery he performed, his lawyer said Friday, raising new doubts whether the physician will regain his freedom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X