For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரீஸில் பயங்கர குண்டு வெடிப்புகள், தொடர் துப்பாக்கிச் சூடு: 127 பேர் பலி: எங்கெங்கும் ரத்த வெள்ளம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, மற்றும் 7 இடங்களில் நடந்த சம்பவங்களில் 127 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

paris bomb blast atleast 60 died

வடக்கு பாரீஸில் உள்ள கால்பந்து மைதனாத்தில் பிரான்ஸ் - ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததாகத் தெரிகிறது. இது ரசிகர்களின் கொண்டாட்டம் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்த குண்டு வெடித்தது. இதனையடுத்து அங்கு பிதி ஏற்பட்டது. அசோசியேடட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததை தான் கேட்டதாகக் கூறியுள்ளார். கால்பந்து நிகழ்ச்சியைக் காண மைதானத்தில் அதிபர் ஹாலந்தேவும் இருந்தார். அவரை பத்திரமாக பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

பிணைக் கைதிகள் விடுவிப்பு

இதேபோல் பாரீஸில் உள்ள பட்டாக்லான் இசையரங்கிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கிருந்த பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
மொத்தம் 8 தீவிரவாதிகள் அந்த அரங்குக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களில் 7 பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டனர். ஏழு பேரும் பலியாகினர். எஞ்சிய 1 தீவிரவாதி பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டார். பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இத்தகவலை பிரான்ஸ் அரசு உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

127 பேர் பலி

இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர்பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும் 100 பேர் பிணைக்கைதிகளாக சிக்கியுள்ளனர். இந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரீஸ் நகரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பின்னர் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 127பேர் பலியானதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.

paris bomb blast atleast 60 died

அவசரநிலை பிரகடனம்

சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார். பிரான்ஸ் தலைநகரில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே. மேலும் சர்வதேச எல்லைகளை மூடவும் உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி வேதனை

குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பிரதமர் மோடி, டுவிட்டரில் பலியான குடும்பத்தினருக்கு தனது வேதனையை தெரிவித்ததோடு இச்சம்பத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை மனிததன்மையற்ற செயல் என அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
At least 60 people were killed in shootings and explosions in central Paris
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X