For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனில் 'மண்டேலா' திரைப்படத்தின் முதல் காட்சியில் வெளியான மறைவுச் செய்தி!!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: மண்டேலா குறித்த திரைப்படம் ஒன்று லண்டனில் வெளியிடப்பட்டது. அப்படத்தின் முதல் காட்சியில் மண்டேலாவின் மறைவு செய்தியும் தெரிவிக்கப்பட்டது பார்வையாளர்கள் அனைவரையும் அதிர வைத்தது.

சுதந்திரத்திற்கான மண்டேலாவின் நீண்ட பயணம் (Mandela : A long way to Freedom) எனும் பெயரில் மண்டேலாவைப் பற்றி திரைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

nelson mandela

மண்டேலா எழுதிய சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் எனும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பிரபல இங்கிலாந்து நடிகர் ஐட்ரிஸ் எல்பா மண்டேலாவாக நடித்துள்ளார்.

இத்திரைப் படத்தின் முதல் காட்சி லண்டனில் நேற்று திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசியார் கேட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மண்டேலாவின் இரு மகள்ளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

படம் முடிவடையும் நிலையில் கேட் - வில்லியம்ஸ் தம்பதியினருக்கு மண்டேலாவின் மறைவுச் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரங்கில் இருந்த ஏனைய பார்வையாளர்களுக்கு படம் முடிந்த பின்னரே மண்டேலாவின் மறைவு தகவல் சொல்லப்பட்டது.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் சிங் மண்டேலாவின் மறைவை அறிவித்தார். இருப்பினும் மண்டேலாவின் மகள்களின் கோரிக்கைக்கு ஏற்ப இத் திரைப்படம் தொடர்ந்து லண்டனில் வெளியிடப்படுகிறது

English summary
News of Mandela's death broke as "Mandela: Long Walk to Freedom" played during its London premiere, where Mandela's daughters Zindzi and Zenani were in attendance. A spokesman with the film said the daughters requested that the film continue, though they immediately left the theater. Producer Anant Singh, who has spent more than a decade trying to get the film made, called for a moment of silence at the film's end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X