For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா கிளம்பிய பிரதமர் மோடி

By Siva
Google Oneindia Tamil News

டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த சனிக்கிழமை ஜப்பான் சென்றார். முதல் இரண்டு நாட்கள் கோவில் நகரமான கியோட்டோவில் தங்கினார். அதன் பிறகு கடந்த திங்கட்கிழமை அவர் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு அவர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேசினார். அப்போது பாதுகாப்பு, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், சுகாதராம், பெண்கள் நலன் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகள் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

PM Modi Concludes Successful Japan Visit, Leaves for Home

இந்தியாவில் வந்து முதிலீடு செய்யுமாறு மோடி ஜப்பான் தொழில் அதிபர்களை கேட்டுக் கொண்டார். அவ்வாறு முதலீடு செய்ய வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க இந்தியா காத்துக் கொண்டிருப்பதாக மோடி தெரிவித்தார்.

மோடி டோக்கியோவில் உள்ள தைமெய் துவக்கப் பள்ளிக்கு சென்று அங்கு மாணவ, மாணவியருடன் பேசியதோடு ப்ளூட் வாசித்தார். மேலும் டோக்கியோவில் டிசிஎஸ் அமைத்துள்ள தொழில்நுட்ப மற்றும் கலாச்சார மையத்தை துவங்கி வைத்தார்.

தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட மோடி இன்று அங்கிருந்து நாடு கிளம்பியுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi today left for home after concluding his successful visit here during which Japan promised to help India financially over the next 5 years for developmental projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X