For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாடிகன் வரலாற்றில் முதல்முறையாக... ஒரே நேரத்தில் இருவருக்கு புனிதர் பட்டம்

Google Oneindia Tamil News

வாடிகன் நகரம்: வாடிகன் நகர வரலாற்றிலேயே முதன்முறையாக முன்னாள் போப்புகள் இருவருக்கு ஒரே நாளில் புனிதர் பட்டம் வழங்க இருப்பதாக தற்போதைய போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

வாழும் காலத்தில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய கத்தோலிக்க கிறிஸ்துவ மதகுருமார்களுக்கு இத்தாலியில் உள்ள வாடிகன் அரண்மனை 'புனிதர்' அல்லது 'செயின்ட்' எனப்படும் உயரிய பட்டங்களை வழங்கி கௌரவப் படுத்தி வருகின்றது.

 Pope John Paul II and Pope John XXIII

அந்தவகையில், ஆட்சி மாற்றம், நோயிலிருந்து விடுதலை, ஏழ்மை மீட்சி போன்ற வியத்தகு செயல்களில் ஈடுபட்டு 2 அற்புதங்களை புரிந்த முன்னாள் போப்புகளில் சிலருக்கு புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 1958ம் ஆண்டிலிருந்து 1963 வரை போப்பாக இருந்து மரணமடைந்த போப் 23வது ஜான் மற்றும் 1978ம் ஆண்டிலிருந்து 2005 வரை போப் பதவியை 27 ஆண்டுகள் வகித்த போப் இரண்டாம் ஜான்பால் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட இருப்பதாக என போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

இந்தப் புனிதப்பட்டம் வழங்கும் விழா அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி வாடிகன் அரண்மனையில் நடைபெற இருக்கின்றது.

English summary
Pope Francis announced Monday Pope John Paul II and Pope John XXIII will be canonized to sainthood on April 27, 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X