For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போப் பிரான்சிஸை குறி வைத்துள்ளனர்: சொல்கிறார் வாடிகனுக்கான ஈராக் தூதர்

By Siva
Google Oneindia Tamil News

ரோம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போப் பிரான்சிஸை கொலை செய்ய விரும்புவதாக வாடிகனுக்கான ஈராக் தூதர் ஹபீப் அல் சதர் தெரிவித்துள்ளார்.

வாடிகனுக்கான ஈராக் தூதர் ஹபீப் அல் சதர் இத்தாலிய செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போப் பிரான்சிஸை கொலை செய்ய விரும்புகிறார்கள். போப் ஆண்டவருக்கு அச்சுறுத்துல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Pope Francis is target for ISIS extremists: Iraqi ambassador to Vatican

இந்நிலையில் போப் பிரான்சிஸ் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அல்பேனியாவுக்கு இந்த வாரம் செல்கிறார். அந்த பயணத்தின்போது தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் திறந்த ஜீப்பில் சென்று மக்களை சந்திக்கிறார்.

முன்னதாக ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை படைகளை வைத்து தடுத்து நிறுத்தும் முடிவுக்கு போப் ஆதரவு தெரிவித்திருந்தார். தன் பேச்சு ராணுவ தாக்குதலுக்கு பச்சை கொடி காட்டுகிறது என்ற நினைப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

இது குறித்து போப் மேலும் கூறுயதாவது,

நான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தான் கூறுகிறேன். வெடிகுண்டு வீசுங்கள், போர் நடத்துங்கள் என்று கூறவில்லை அவர்களை தடுத்து நிறுத்துங்கள் என்று மட்டும் தான் கூறுகிறேன். அநியாயம் செய்பவர்களை தடுத்து நிறுத்துவது சட்டத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றார்.

English summary
Iraqi ambassador to Vatican, Habeeb Al Sadr told an Italian daily that ISIS terrorists want to kill Pope Francis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X