For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயமான விமானத்தின் பைலட் ஏன் சந்தேகத்திற்குரியவர்..? இதோ மீடியாக்கள் சொல்லும் சில காரணங்கள்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர் : விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாயமான விமானத்தின் விமானி மீது ஊடகங்கள் பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளன.

கடந்தமாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று மாயமானது. தொடர்ந்து கிடைத்த முரண்பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானம் கடத்தப்பட்டதா அல்லது விபத்தில் சிக்கியதா என்ற குழப்பம் நீடித்தது.

கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான நாடுகள் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. பின்னர், ஒரு வழியாக செயற்கைக் கோள்கள் உதவியுடன் விமானம் விபத்தில் சிக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மலேசியா.

ஆனபோதும், தனது பயணப் பாதையை மாற்றியது ஏன்? எப்படி விபத்து உண்டானது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தொடர்ந்து தேடப் பட்டு வருகிறது. இதற்கிடையே மலேசிய விமானத்தின் சிதைந்த பகுதிகளை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விமானம் விபத்தில் சிக்கியதாகச் சொல்லப் பட்டாலும் அது எதிர்பாராமல் நடந்ததா அல்லது சதிச்செயலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்திஅ விமானியே கடத்தி, விபத்தை உண்டாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஊடகங்கள் விமானியே இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பலதரப்பட்ட யூகங்களைக் காரணங்களாகக் கூறுகின்றன. இதோ அவைகளாவன....

முதல் காரணம்...

முதல் காரணம்...

விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்ககூடும் என்ற சந்தேக எழுந்ததற்கு முதல் காரணம் விமானம் பாதை மாற மிகவும் அபாயகரமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவது தான்.

விமானி தற்கொலை...

விமானி தற்கொலை...

விமானத்தில் இருந்து கடைசியாக துணை விமானியே கட்டுப்பாட்டு அறைக்கு பேசியதாக ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமானத்தை ஓட்டி சென்ற விமானி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திசை திருப்பப் பட்ட விசாரணை...

திசை திருப்பப் பட்ட விசாரணை...

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தித்தாள் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த விசாரணையை திசை திருப்புகிறது.

சரி பார்க்கப்படாத தகவல்கள்...

சரி பார்க்கப்படாத தகவல்கள்...

மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான தகவல்கலையே வெளியிட்டு உள்ளனர்.விமானம் குறித்து விசாரணை நடத்தியவர்களிம் எந்த தகவலையும் அவர்கள் சரிபார்க்கவில்லை. தற்போது இயந்திர கோளாறு காரணமாக விமானம் வெடித்திருக்கலாம் அல்லது தீ பற்றி இருக்கலாம் எனற கோணத்தில் திருப்புகிறது என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மனநிலை தடுமாற்றம்...

மனநிலை தடுமாற்றம்...

தலைமை விமானி ஜாகாரி அகமது ஷா சரியான மன நிலையில் இல்லை எனறு கூறப்படுகிறது. அவர் தீவிர குடும்ப பிரச்சினைகளை சந்தித்து வந்தார் என அவரது நீண்ட நாள் நண்பர் கூறியதாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

தற்கொலை முயற்சியா...

தற்கொலை முயற்சியா...

மேலும், ஷா தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழந்தார் என்றும், மேலும் அவருக்கு மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் அந்த உறவிலும் சிக்கல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனமுடைந்த விமானி தற்கொலை முயற்சியாக விமானத்தை விபத்தில் சிக்க வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா...?

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா...?

இங்கிலாந்து பத்திரிகைகள் ஏற்கனவே அரசியல் காரணங்களுக்காக தலைமை பைலட் ஷா விமானத்தை கடத்தி இருக்கும் சாத்திய கூறுகள் உள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தன .தலைமை பைலட் அரசியலில் ஆர்வமாக இருந்தார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவாளராக இருந்து உள்ளார் எனவும் தெரிவித்து இருந்தன.

சுயநினைவை இழந்த பயணிகள்...

சுயநினைவை இழந்த பயணிகள்...

ஷா விமானத்தை 45,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்று அந்த உயரத்திலேயே 23 நிமிடம் விமானத்தை வைத்து அதன் பிறகே கீழ் நோக்கி வந்துள்ளார். அந்த உயரத்தில் 12 நிமிடங்களிலேயே ஆக்சிஜன் தீர்ந்திருக்கும். இதனால் விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பே பயணிகள் ஆக்சிஜன் இன்றி சுயநினைவை இழந்திருப்பார்கள் எனச் சந்தேகிக்கப் படுகிறது.

தீர்ந்து போனதா எரிபொருள்....

தீர்ந்து போனதா எரிபொருள்....

விமானியே விமானத்தின் எரிபொருளை தீரவைத்து விமானததை கீழ் நோக்கி விழவைத்து இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

யார் அந்தப் பெண்....

யார் அந்தப் பெண்....

கடந்த 8-ம் தேதி விமானத்தை இயக்கும் முன்பு கேப்டன் ஷா ஒரு பெண்ணுடன் தனது செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகே அவர் விமானத்தை இயக்கி வேறு பாதையில் சென்றுள்ளார். போலீஸ் விசாரணையில் அந்தப் பெண்ணின் செல்போன் எண் போலி முகவரியில் வாங்கியதாக தெரியவந்துள்ளது. அதனால் இது தற்கொலை அல்லது சதி முயற்சியாக இருக்கலாம் என்றே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The medias says different reasons that why we can suspect the missing Malasiyan aircraft's pilot for the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X