For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல மணிநேர காரசார பேச்சுக்குப் பிறகு மலேசியாவிடம் கருப்பு பெட்டியை ஒப்படைத்த ரஷ்ய புரட்சிப்படை

By Siva
Google Oneindia Tamil News

கீவ்: ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகளை மலேசிய நிபுணர்களிடம் ஒப்படைத்தனர்.

உக்ரைனில் பக் ஏவுகணை வீசப்பட்டு தாக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடத்தில் விழுந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட உடல்களை கூட தீவிரவாதிகள் மிரட்டி வாங்கி ரயில்களில் ஏற்றிச் சென்றனர்.

முன்னதாக மீட்பு குழுவினரையும் சம்பவ இடத்திற்கு வரவிடாமல் தடுத்தனர்.

தீவிரவாதிகள்

தீவிரவாதிகள்

மலேசிய விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளையும் தீவிரவாதிகள் எடுத்துச் சென்று தங்கள் அலுவலகத்தில் வைத்துக் கொண்டனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

மலேசியாவில் இருந்து வந்த நிபுணர்கள் குழு தீவிரவாதிகளிடம் பல மணிநேரம் காரசாரமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

கருப்பு பெட்டிகள்

கருப்பு பெட்டிகள்

பேச்சுவார்த்தையை அடுத்து 2 கருப்பு பெட்டிகள் மலேசிய குழுவிடம் ஒப்பைடக்கப்பட்டுள்ளது. விமானத்தை யார் தாக்கினார்கள் என்ற உண்மை இனி தெரிய வரும் என்று ரஷ்ய ஆதரவுப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

மலேசிய விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகள் தான் தாக்கினர் என்று உக்ரைன் அரசு தெரிவித்தது. அமெரிக்காவும் அதையே தான் கூறகிறது. ஆனால் ரஷ்யாவோ இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

வீடியோ

வீடியோ இணைப்பு

English summary
Pro-Russian rebels have handed over the two black boxes of the downed Malaysian airlines flight MH 17 to the Malaysian experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X