For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரனில் மோதி நொறுங்கியது நாசாவின் ‘லேடீ’

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நாசா அமெரிக்காவின் நாசா நிலவை ஆராய அனுப்பிய புதிய விண்கலமான லேடீ நிலவின் பரப்பின் மீது மோதி விழுந்து நொறுங்கியது

நேற்று இரவு அது விழுந்து நொறுங்கியது. நிலவை ஆராய அனுப்பப்பட்ட புதிய விண்கலம்தான் இந்த லேடீ. Lunar Atmosphere and Dust Environment Explorer spacecraft என்பது இதன் முழுப் பெயராகும்.

சர்வதேச நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கும், 1.22 மணிக்கும் இடையே இந்த மோதல் நடந்துள்ளது.

RIP LADEE: NASA Moon Probe Crashes Into Lunar Surface

சந்திரனை நெருங்கியது...

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த விண்கலமானது சந்திரனை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு...

இந்த மோதலை ஏற்கனவே நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்தனர். எரிபொருள் தீர்ந்து போனதால் விண்கலம் சந்திரனில் விழுந்து நொறுங்கி விட்டது.

ஆவியான வெப்பம்...

விண்கலம் விழுவதற்கு முன்பு பல நூறு டிகிரி அளவுக்கு வெப்பம் எழுந்து விண்கலைத்தைப் பொசுக்கி விட்டதாம். விண்கலம் விழுந்த வேகத்தில் அது சூட்டால் பல பகுதிகள் ஆவியாகியும் போய் விட்டதாம்.

அதிக வேகம்...

விண்கலம் சந்திரனில் விழுந்தபோது மணிக்கு 5800 கிலோமீட்டர் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.

ஆராய்ச்சி...

தற்போது விண்கலம் விழுந்த இடம் எது என்ற ஆய்வு தொடங்கியுள்ளது. அது மலைப்பகுதியில் விழுந்ததா அல்லது தரைத் தளத்தில் விழுந்ததா என்று ஆராய்கிறார்களாம்.

சந்திரனில் மாற்றம்..?

அதேபோல், விண்கலம் விழுந்ததால் சந்திரனின் தரைப்பரப்பில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்ததா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

English summary
NASA's newest moon probe met its end during a vaporizing crash into the lunar surface last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X