For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெக்டொனால்டு உணவகங்களை இழுத்து மூடிய ரஷ்யா- அமெரிக்காவுக்கு பதிலடி!

By Mathi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் 4 மெக்டொனால்டு உணவகங்களை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மெக்டொனால்டு உணவகம் 1940ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 119 நாடுகளில் மொத்தம் 35 ஆயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது.

ரஷியாவில் மட்டும் 424 மெக்டொனால்டு உணவகத்தின் கிளைகள் இருக்கின்றன. இவற்றில் மாஸ்கோவில் உள்ள 4 கிளைகளில் ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Russia Suspends Operation at Four McDonald's Restaurants

உணவகங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறி இந்த 4 கிளைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ரஷ்யா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மெக்டொனால்டு நிறுவனத்தின் இதர கிளைகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து இருதரப்பு உறவும் சீர்குலைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் உணவகங்களை இழுத்து மூடும் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பில் மெக்டொனால்டு உணவகங்களை இழுத்து மூடுவதற்கு ஆதரவாக 62% பேர் ஆதரவு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Russia's consumer rights watchdog, Rospotrebnadzor, said Wednesday it had suspended operations at four McDonald's restaurants in Moscow after numerous violations of sanitary regulations had been found at popular fast food outlets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X