For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவில் விஷக்குண்டு தாக்குதல் – ஒருவர் பலி, 70 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: சிரியாவில் மீண்டும் நடைபெற்ற விஷகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார்.மேலும் 70 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சி படை வசம் சில நகரங்கள் உள்ளன. அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

அதற்காக அந்நகரங்கள் மீது விஷ குண்டுகளை ராணுவம் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இட்லிப், ஹமா மாகாணங்களில் இது போன்று தாக்குதல் நடத்தியது. அதில் பலர் பலியானார்கள்.

Syria attacked by poison bombs…

இதற்கு ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை சிரியா மறுத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் விஷகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அல் தமனாக் நகரின் மீது ஹெலிகாப்டர் 2 விஷகுண்டுகளை வீசியது. அவை குளோரின் கேஸை வெளியேற்றியது.

இத்தாக்குதலில் ஒருவர் பலியானார். 70 பேர் காயம் அடைந்தனர். அந்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதே நேரத்தில் ரஷிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு கப்ரா ஷதா மற்றும் தல் மைனான்ங் கிராமங்களில் அல் கொய்தா தீவிரவாதிகள் விஷகுண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Syrian bomb blast again injured 70 people. Terrorist attacks the people through helicopter using of poison bombs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X