For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரிய வீரரின் தலையுடன் போஸ் கொடுத்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மகன்!

Google Oneindia Tamil News

கான்பெரா: தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் மகன், சிரிய ராணுவ வீரரின் தலையைக் கையில் பிடித்தபடி போஸ் கொடுப்பது போன்ற படம் டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் அந்தப் பையனின் வயது 10தான். தனது மகனின் வீர பராக்கிரமத்தைப் பாரீர் என்று டிவிட்டரில் அவனது தந்தை படத்தைப் போட்டுக் கொக்கரித்துள்ளார்.

அந்தச் சிறுவனின் தந்தை ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். சிறுவனும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவன். தந்தையின் பெயர் காலித் ஷராப். இவர் ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவர். சிரியாவுக்கு எதிரான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருப்பவர்.

சிரியாவின் ரக்கா நகரில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஒரு சிரிய ராணுவ வீரரின் தலையை தனியாக வெட்டி எடுத்து அதைத் தனது கையில் ஏந்திப் பிடித்தபடி நிற்கிறான் இந்த 10 வயது சிறுவன். இவன் எனது மகன் என்று அதை டிவிட்டரில் பெருமையுடன் போட்டுள்ளார் ஷராப். அந்த சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஷராப் தனது சகோதரரின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு தனது மனைவி, 3 மகன்களுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறினார். சிரியா, ஈராக்குக்கு எதிரான ஐஎஸ்ஐஎஸ் போரில் கலந்து கொண்டார்.

கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகங்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டபட்டது. அதில் 9 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் ஒருவர் காலித் ஷராப். இதனால் அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் எப்படியோ குடும்பத்துடன் தப்பி விட்டார்.

மேலும் அவருக்கு கடந்த 2009ம் ஆண்டு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
An Australian newspaper on Monday published a photograph of a child it said was the son of an Australian convicted terrorist holding aloft the severed head of a Syrian soldier. The Australian newspaper reported that the photograph of terrorist Khaled Sharrouf's son, who was raised in Sydney, was posted on Twitter by his proud father. "That's my boy!" Sharrouf apparently posted beneath the image that was taken in the northern Syrian city of Raqqa, the capital of what has been declared that an Islamic Caliphate by the Islamic State, the newspaper reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X