For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிசயம் நடக்கலாம்.. விமான தேடுதலில் முக்கிய கட்டம் வந்துவிட்டது: மீண்டும் மலேசிய அமைச்சர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம் என்று அந்த நாட்டு போக்குரத்து அமைச்சர் ஹிஸ்முதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8ந் தேதி திடீரென மாயமானது. இதுவரை விமானம் என்ன ஆனது, அதிலிருந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த மர்மம் விலகவில்லை.

The effort to find missing malaysian flight is at a very critical juncture

இதுகுறித்து மலேசிய அமைச்சர் லிஸ்முதீன் ஹூசைன் இன்று கூறுகையில், இன்றும் நாளையும் நடைபெறும் தேடுதல் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உலகுக்கு உணர்த்துவோ.

உலகம் எங்கும் உள்ள மக்கள் அதிசயம் நடக்க வேண்டிக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஆஸ்திரேலிய கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மர்மப்பொருள் கடலுக்கு அடியில் இருப்பது போன்ற தகவல் கிடைத்திருந்தது. ஆனால் அதுகுறித்த தேடுதலில் எந்த பொருளையும் கண்டெடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோர பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில் மலேசிய அமைச்சரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

English summary
The effort to find missing flight MH370 is at a "very critical juncture", said Malaysia's transport minister Hishammuddin Hussein. The search for today and tomorrow is at a very critical juncture he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X